ரூ.2500 மகளிர் உரிமை தொகை எப்போது வழங்கப்படும்.. அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஷாக் பதில்!
Magalir Urimai Thogai: தமிழகத்தில் மகளிர்களுக்கான உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு, திமுக ஆட்சியில் எப்போது வழங்கப்பட்டது. அதை ஏன் உடனே கேட்கிறீர்கள் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.2500 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ரூ.13.32 லட்சம் கோடி கடன் உள்ளது. இவற்றை சரி செய்ய வேண்டும். கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகையை எப்போது வழங்கினர். எங்களிடம் மட்டும் ஏன் இப்போதே கேட்கிறீர்கள். தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் தலைமையில் அதிமுக அகதிகள் அணி உள்ளதாக ஆர். பி. உதயகுமார் கூறியுள்ளார். யார் அகதிகளாக போகிறார்கள் என்று அவருக்கு காலம்தான் பதில் சொல்லும். நீட் தேர்வு விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் தமிழக வெற்றிக்கழக அரசு எடுக்கவில்லை முதல்வர் ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது.
234 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருக்கும்
கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சென்னையில் கடலின் உள்ளேட ரூ.84 கோடிக்கு பேனா வைப்பதாக தெரிவித்திருந்தனர். அந்த பேனா வைக்க வேண்டும் என்று யார் கேட்டனர். இது போன்று எதை எதையோ கேட்பதற்கெல்லாம் பதில் கூறினால் மனது சங்கடம் ஏற்படும். நாங்கள் மூத்த அரசியல்வாதிகள் என்பதால் இதெல்லாம் வேண்டாம் என்று நினைக்கிறேன். ஜனநாயன் திரைப்படம் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கும்.
மேலும் படிக்க: கரூரில் அதிரடி.. புகழூர் நகராட்சி அலுவலகத்தை அலறவிட்ட லஞ்ச ஒழிப்பு படை.. கணக்கில் வராத பணம் சிக்கியது!




நீட் தேர்வுக்கு எதிராக விஜய் குரல் கொடுத்தார்
தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தார். மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை ஆகும் என்று தெரிவித்தார். மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு எங்களிடம் மட்டும் ஏன் இப்போதே கேட்கிறீர்கள் என்று அமைச்சர் கூறி இருந்தது சற்று அதிர்ச்சி ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் ரூ.1000 மகளிர் உரிமைக்காக வழங்கப்பட்டு வந்தது.
உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை
இந்த தொகை தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில், தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்து 3 மாதங்கள் ஆகும் நிலையில் தற்போது வரை உயர்த்தப்பட்ட உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட ரூ.1000 உரிமைத் தொகையை வரவு வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அரசியலில் இருந்து ஓய்வு கிடையாது.. அன்புமணி!