நோ பெட்ரோல்.. நோ டிராஃபிக்.. சென்னையில் வெள்ளை குதிரையில் சொமேட்டோ ஊழியர் உணவு டெலிவரி..!
Zomato Delivery Person horseback : சென்னையில் சொமேட்டோ ஊழியர் ஒருவர் வெள்ளை நிற குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பான முழு விவரங்களை இந்தப் பதிவில் விரிவாகப பார்க்கலாம்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பொதுமக்களுக்கு சொமேட்டோ, ஸ்வீகி உள்ளிட்ட நிறுவனங்கள் வாயிலாக உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதில், செல்போன் செயலிகள் மூலமாக தங்களுக்கு பிடித்தமான உணவை, விருப்பமான கடைகளை தேர்வு செய்தால் அதனை மேற்கண்ட இரு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் தங்களது வீடுகளுக்கே வந்து வழங்கி செல்கின்றனர். இதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலமாக பொதுமக்களும் செலுத்தி வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சொமேட்டோ ஊழியர் ஒருவர் இரு சக்கர வாகனத்திற்கு பதிலாக குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கம் பகுதியில் சொமேட்டோ ஊழியர் ஒருவர் குதிரையில் உணவு டெலிவரி செய்வதற்காக சென்று உள்ளார்.
வெள்ளை நிற குதிரையில் சொமேட்டை பேக்குடன் சென்ற நபர்
பரபரப்பான அந்த சாலையில் வாகனங்கள் அணிவகுத்து செல்லும் வேளையில், இந்த ஊழியர் வெள்ளை நிற குதிரையில் சொமேட்டோ நிறுவன பேக்கை அணிந்தவாறு உணவு டெலிவரி செய்ய சென்றது அந்த பகுதி மக்களிடையை விசித்திரமாக பார்க்கப்பட்டது. இதனை, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.




மேலும் படிக்க: ‘ஜனநாயகன்’ தியேட்டரில் விஜய பிரபாகரன் தோல்வி வீடியோ.. மன்னிப்பு கேட்ட தவெக எம்எல்ஏ..
சென்னை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க
சென்னையில் ஒவ்வொரு நாளும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வது வழக்கமாக ஒன்றாகும். ஆனால், சொமேட்டோ ஊழியர் ஒருவர் உணவு பார்சல்களை டெலிவரி செய்வதற்காக வெள்ளை நிற குதிரை மீது ஏறி கம்பீரமாக சென்றுள்ளார். அதிகப்படியான போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கும் வகையில் அந்த நபர் வாடிக்கையாளர்களுக்கு உணவே விநியோகிக்க இந்த மாறுபட்ட முறையை கையாண்டதாக கூறப்படுகிறது.
குதிரையில் Zomato டெலிவரி!
சென்னை பாலவாக்கம் புறநகர் பகுதியில் Zomato டெலிவரி பார்ட்னர் ஒருவர் உணவை குதிரையில் சென்று டெலிவரி செய்த காட்சி இணையத்தில் வைரல்
டிராஃபிக், சாலை பிரச்சனை என எதுவாக இருந்தாலும் “உணவு சரியான நேரத்தில் போய் சேரனும்” என்ற அர்ப்பணிப்போடு இப்படி குதிரையில்… pic.twitter.com/eHZOn4YvAb
— Kᴀʙᴇᴇʀ – தக்கலை கபீர் (@Autokabeer) July 26, 2026
வைரல் வீடியோவுக்கு பலரும் பல்வேறு கருத்து
சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான குதிரை சவாரி வாயிலாக உணவு டெலிவரி செய்யும் முறை மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு சரியான தீர்வு என்றும் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: தமிழக சுங்கச்சாவடிகளில் உள்ளூர் பாஸ் கட்டணம் மீண்டும் அதிகரிப்பு.. பின்னணி என்ன?