AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வீடு புகுந்து பள்ளி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் – காதலிக்க மறுத்ததால் விபரீதம்

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி என்ற கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியை கத்திக்தியால் குத்திய செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வீடு புகுந்து பள்ளி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் – காதலிக்க மறுத்ததால் விபரீதம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 Jul 2026 15:19 PM IST

சிதம்பரம், ஜூலை 26 : சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி என்ற கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியை கத்திக்தியால் குத்திய செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் ககாதலிக்க வற்புறுத்தி வந்ததாக கூறப்படும் நிலையில், மாணவி தொடர்ந்து மறுத்து வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜூலை 26, 2026 அவர் இன்று வீட்டில் தனியாக இருந்த நிலையில் 16 வயது மாணவியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தப்பியோடியுள்ளார்.

வீடு புகுந்து பள்ளி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்

இந்த நிலையில் கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மாணவி கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காதலிக்க வற்புறுத்தி, வீட்டில் தனியாக இருந்த மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் ஐயப்பன் தற்போது தலைமறைவாக உள்ளவதாகவும் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : தமிழக சுங்கச்சாவடிகளில் உள்ளூர் பாஸ் கட்டணம் மீண்டும் அதிகரிப்பு.. பின்னணி என்ன?

சிதம்பரம் அருகே கீழ மூங்கிலடி கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் அப்பகுதியில் வசிக்கும் 11ஆம் வகுப்பு மாணவியின் வீட்டுக்கு எலெக்ட்ரிக்கல் வேலை செய்ய சென்றபோது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அப்போது முதல் தொடர்ச்சியாக ஜயப்பன் தன்னை காதலிக்குமாறு மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

காதலிக்க மறுத்ததால் விபரீதம்

ஆனால் மாணவி தொடர்ந்து காதலிக்க மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமைந்த ஐயப்பன், மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்த நிலையில் இளைஞர் ஐயப்பன் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தததுடன் அந்த பகுதிக்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாணவியை கத்தியால் குத்திய ஐயப்பனை போலீசார் தேடிவருகின்றனர்.

காதலிக்க மறுத்ததால் பள்ளி மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிக்க : ‘ஜனநாயகன்’ தியேட்டரில் விஜய பிரபாகரன் தோல்வி வீடியோ.. மன்னிப்பு கேட்ட தவெக எம்எல்ஏ..

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருவதாக அரசு மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.  இதனையடுத்து தமிழக அரசு சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாபபை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண்கள் சிறப்பு காவல்படையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Follow Us