திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் சுவர்களுக்கு இடையே சிக்கிய பெண்.. அதிர்ச்சி சம்பவம்!
Woman Trapped Between Temple Walls | திருவண்ணாமலை கிரிவல பாதையில் இடுக்கு பிள்ளையார் கோயில் ஒன்று அமைந்துள்ளது. ஜூலை 24, 2026 அன்று இதில் சிக்கி இளைஞர் பலியான நிலையில், ஜூலை 25, 2026 அன்று மீண்டும் ஒரு பெண் சிக்கியுள்ளார்.
திருவண்ணாமலை, ஜூலை 27 : திருவண்ணாமலையில் (Tiruvannamalai) உள்ள இடுக்கு பிள்ளையார் கோயில் சுவர்களில் மீண்டும் ஒரு பெண் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 24, 2026 அன்று அந்த சுவர்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட ஆந்திர இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஜூலை 25, 2026 மீண்டும் ஒரு ஆந்திராவை சேர்ந்த பெண் சிக்கிக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் வழிபடும் பக்தர்கள்
திருவண்ணாமலை கிரிவல பாதையில் இடுக்கு பிள்ளையார் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் மூன்று வாசல்கள் உள்ளன. இந்த மிகவும் குறுகிய வாசல்கள் வழியாக நுழைந்து வெளியே வருவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த வாசல்கள் மிகவும் குறுகலானவை என்பதால், சற்று உடல் பருமன் இருந்தால் கூட அதில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க : எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க தவறியவரா நீங்கள்? வெளியானது அதிரடி அறிவிப்பு!
இந்த நிலையில் தான் ஜூலை 24, 2026 அன்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மணிக்குமார் என்ற 36 வயது நபர் தனது குடும்பத்துடன் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுள்ளார். அப்போது அவர் இடுக்கு பிள்ளையார் கோயிலின் குறுகிய வாசல் வழியாக உள்ளே நுழைந்துள்ளார். ஆனால், அவரால் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் போயுள்ளது. இதனை கண்ட சக பக்தர்கள் போராடி அவரை மீட்டுள்ளனர்.
மூச்சுத்திணறி உயிரிழந்த நபர்
இந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் சோகம் மறைவதற்குள்ளாகதான் ஜூலை 25, 2026 அன்று மேலும் ஒரு ஆந்திரா பெண் பக்தர் அந்த சுவர்களுக்கு இடையே சிக்கிக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அரசியலில் இருந்து ஓய்வு கிடையாது.. அன்புமணி!
இந்த நிலையில், கோயிலுக்குள் இருந்த சக பக்தர்கள் அந்த பெண்ணை வெளியே கொண்டுவந்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.