AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

CWG 2026: இந்தியாவிற்கு முதல் தங்கம்.. 190 கிலோ எடை தூக்கி தங்கத்தை வென்ற மீராபாய் சானு!

Mirabai Chanu Win Gold: இந்தியாவின் நட்சத்திர பளுதூக்கு வீராங்கனை மீராபாய் சானு, ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவுகளில் மொத்தம் 190 கிலோகிராம் எடையைத் தூக்கினார். இரண்டாம் இடம் பிடித்த நைஜீரியாவின் ரூத் நியாங்கோவை விட 22 கிலோகிராம் அதிகமாக மீராபாய் தூக்கியதால், அவரது வெற்றியும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.

CWG 2026: இந்தியாவிற்கு முதல் தங்கம்.. 190 கிலோ எடை தூக்கி தங்கத்தை வென்ற மீராபாய் சானு!
மீராபாய் சானுImage Source: Saikhom Mirabai Chanu/X
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Jul 2026 06:00 AM IST

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (Common Wealth Games 2026) இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. நட்சத்திர பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, பளுதூக்குதல் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இது மீராபாய்க்கு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கிடைக்கும் 4வது தொடர்ச்சியான பதக்கமாகும். இதற்கு முன்னர் நடைபெற்ற கிளாஸ்கோ விளையாட்டுப் போட்டிகளில் 48 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி, மீராபாய் சானு (Mirabai Chanu) தொடர்ச்சியாக 3 காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளார். முன்னதாக, கடந்த 2018, 2022 மற்றும் தற்போது 2026 போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த காமல்வெல்த் விளையாட்டு போட்டியில் மட்டும் மீராபாய் வெள்ளிப் பதக்கத்தையே வெல்ல முடிந்தது.

ALSO READ: காமன்வெல்த் போட்டிகள்: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா.. ஜூலை 26ம் தேதிக்கான அட்டவணை

 தூக்கப்பட்ட 190 கிலோ:


இந்தியாவின் நட்சத்திர பளுதூக்கு வீராங்கனை மீராபாய் சானு, ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவுகளில் மொத்தம் 190 கிலோகிராம் எடையைத் தூக்கினார். இரண்டாம் இடம் பிடித்த நைஜீரியாவின் ரூத் நியாங்கோவை விட 22 கிலோகிராம் அதிகமாக மீராபாய் தூக்கியதால், அவரது வெற்றியும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.

மீராபாய் சானு ஸ்னாட்ச் சுற்றில் 85 கிலோகிராம் எடையைத் தூக்கி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்தார். பின்னர், கிளீன் அண்ட் ஜெர்க் சுற்றில் 105 கிலோகிராம் எடையைத் தூக்கி, மொத்தம் 190 கிலோகிராம் எடையை எட்டி தங்கப் பதக்கத்தை வென்றார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இது இந்தியாவின் இரண்டாவது பதக்கமாகும். இவருக்கு முன்னதாக, ரிஷிகாந்த் சிங் ஆடவர் 60 கிலோகிராம் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.

முதல் முயற்சியில் தோல்வி:

கிளீன் அண்ட் ஜெர்க் சுற்றில், மீராபாய் சானு தனது முதல் முயற்சியில் 105 கிலோகிராம் எடையைத் தூக்கத் தவறினார், ஆனால் இரண்டாவது முயற்சியில் அதே எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார்.

ALSO READ: ஜிம்னாஸ்டிக்ஸின்போது நழுவிய கைகள்.. தரையில் பலமாக மோதிய இங்கிலாந்து வீரர்.. அதிர்ச்சியை கொடுத்த வீடியோ!

இந்தப் பதக்கத்தின் மூலம், இந்தியா பதக்கப் பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2026 காமல்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் மீராபாய் சானு (தங்கம்), ரிஷிகாந்த் சிங் (வெள்ளி) மற்றும் ஜண்டு குமார் (வெண்கலம்) ஆகியோர் பதக்கங்களை வென்றுள்ளனர்.

Follow Us