Common Wealth Games 2026: இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா.. சிங்கமாய் காமன்வெல்த்தில் களமிறங்குவது எப்போது?
CWG Neeraj Chopra Match Date: 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தடகள மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் வருகின்ற 2026 ஜூலை 27 அன்று தொடங்கி 2026 ஆகஸ்ட் 2 வரை நடைபெறும். வருகின்ற 2026 ஜூலை 30 அன்று நடைபெறும் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா களமிறங்குவார்.
2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் (Common Wealth Games 2026) நேற்று அதாவது 2026 ஜூலை 23ம் தேதி முதல் தொடங்கி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2026 ஜூலை 23 முதல் வருகின்ற 2026 ஆகஸ்ட் 2 வரை நடைபெறும். இந்த மிகப்பெரிய போட்டியில் மீராபாய் சானு மற்றும் நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) உட்பட மொத்தம் 124 இந்திய விளையாட்டு வீரர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர். இதில், இந்திய ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா களமிறங்குவதை காண மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர். நீரஜ் சோப்ரா 8 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குத் திரும்புகிறார். நீரஜ் 2018-ல் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார். ஆனால் காயம் காரணமாக 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. இந்தநிலையில், 2026 காமன்வெல்த் விளையாட்டில் நீரஜ் சோப்ரா தனது போட்டியில் எப்போது பங்கேற்பார் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
ALSO READ: காமன்வெல்த் விளையாட்டு : தங்கப் பதக்கத்தில் எவ்வளவு தங்கம் இருக்கும்?
நீரஜ் சோப்ராவின் போட்டி எப்போது?
2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தடகள மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் வருகின்ற 2026 ஜூலை 27 அன்று தொடங்கி 2026 ஆகஸ்ட் 2 வரை நடைபெறும். வருகின்ற 2026 ஜூலை 30 அன்று நடைபெறும் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா களமிறங்குவார். இவருடன் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் யஷ்விர் சிங் மற்றும் ரோஹித் யாதவ் ஆகியோரும் பதக்கத்திற்காகப் போட்டியிடுவார்கள்.




நீரஜ் சோப்ராவும் மற்ற விளையாட்டு வீரர்களும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், அனைவரும் வருகின்ற 2026 ஜூலை 31ம் தேதி நடைபெறும் பைனலில் நீரஜ் சோப்ராவுடன் மோதுவார்கள்.
காமன்வெல்த் போட்டியில் நீரஜ் சோப்ராவின் செயல்திறன்:
நீரஜ் சோப்ரா காமன்வெல்த் போட்டிகளில் ஒரே ஒரு முறை மட்டுமே பங்கேற்றுள்ளார். 2018 கோல்ட் கோஸ்ட் போட்டிகளின் இறுதிச் சுற்றில், 86.47 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார். அதைத் தொடர்ந்து, காயம் காரணமாக 2022 காமன்வெல்த் போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை. சர்வதேச அளவில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவின் தனிப்பட்ட சிறந்த தூரம் 90.23 மீட்டர் ஆகும்.
ALSO READ: காமன்வெல்த் 2022 போட்டியில் இடம்பெற்ற கிரிக்கெட் 2026ல் நீக்கம் – காரணம் என்ன?
564 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா:
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் இந்தியா இதுவரை மொத்தம் 564 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 203 தங்கம், 190 வெள்ளி மற்றும் 171 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். கடந்த 2022ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு, இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் உட்பட 61 பதக்கங்களை வென்றது.