சென்னையில் மெட்ரோ பயணம் இன்னும் ஈசி… விரிவாக்கம் செய்யப்படும் 2 வழித்தடங்கள்.. எவை தெரியுமா?
Chennai Metro Rail Corridor Extended: சென்னையில் கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரையும், அசிசி நகர் முதல் விம்கோ நகர் வரையும் மெட்ரோ ரயில் சேவை வழித்தடம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கான டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
சென்னை மாவட்டத்தில் பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவையில் மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த ரயில் சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், தற்போது 2- ஆவது கட்ட விரிவாக்கத்தின்படி, தெற்கு பகுதியில் செங்கல்பட்டு வரையும், வடபகுதியில் விம்கோ நகருக்கு வழித்தடம் 5 வரையிலும் மெட்ரோ வழி தடம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான 2 விரிவான திட்ட அறிக்கைகளுக்காக டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆய்வுகளில் பெரியதாக வழித்தடம் 1 ( முதலாவது கட்டம்) திட்டத்தின் கீழ், திட்டமிடப்பட்ட கிளாம்பாக்கம் மெட்ரோ நிலையத்தை செங்கல்பட்டு வரை சுமார் 27 கிலோ மீட்டர் தொலைவிற்கு நீட்டிக்கப்பட உள்ளது. இதற்காக சி.எம்.ஆர்.எல். நிறுவனம் ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் இந்த ஒப்பந்த புள்ளியை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை
இதற்காக முன்மொழிக்கப்பட்ட இந்த வழித்தடம், சென்னை விமான நிலையம்- கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை விரிவுபடுத்தும். இந்த திட்டத்துக்காக சி. எம். ஆர். எல். நிறுவனம் கடந்த 2025- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாநில அரசிடம் ஒரு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ரூ.9,335 கோடி மதிப்பீட்டில் ஒரு மேம்பால சாலையும் அமைய உள்ளது. சுமார் 15.46 கிலோ மீட்டர் தொலைவு உள்ள உயர்மட்ட வழித்தடம் மற்றும் 13 நிறுத்தங்கள் வழியாக சென்னை விமான நிலையத்தை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் பயங்கரம்.. கத்திகளுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்.. 2 பேருக்குப் பலத்த வெட்டுக்காயம்




அசிசி நகர் முதல் விம்கோ நகர் வரை
இந்த திட்டத்துக்காக மத்திய அரசிடம் இருந்து அனுமதி கோரப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரூ.88 லட்சம் மதிப்பிலான 2- ஆவது டெண்டர் வட சென்னையில் உள்ள அசிசி நகரில் இருந்து விம்கோ நகர் வரை செல்லும் காரிடார் 5 (2- ஆம் கட்டம்) இன் 11 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட உள்ளது. தற்போது உள்ள விம்கோ நகர் மெட்ரோ நிலையத்துடன் இணைப்பதன் மூலம், நகரின் வடக்கு பகுதியில் மெட்ரோ இணைப்பை வலுப்படுத்துவதே இந்த நீட்டி பின் நோக்கம் என்று மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ விரிவாக்க பணிகள் 4 மாதங்களில் முடிக்க திட்டம்
வட சென்னையில் உள்ள விம்கோ நகர், புறநகர், பிராந்திய மற்றும் நகர்ப்புற போக்குவரத்தை ஒரே முனையத்தில் ஒருங்கிணைக்கும் திட்டங்களில் இந்திய ரயில்வே, சென்னை மெட்ரோ மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் இணைந்து செயல்படுவதால் ஒரு போக்குவரத்து பரிமாற்றம் மையமாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த 2 விரிவான திட்ட அறிக்கைகளும் 4 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: CMDA விதிகளில் அதிரடி மாற்றம்.. ஒரே மாதத்தில் 17 உயரமான கட்டடங்களுக்கு அனுமதி!!