ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. எத்தனை மாவட்டங்களில் கனமழை இருக்கும்?
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, வட கடலோரத் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலை 27, 2026: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வரக்கூடிய நாட்களிலும் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது எனவும், இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில இடங்களில் மட்டும் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாகப் பதிவாகக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு:
சென்னையைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
வெயில் ஒரு பக்கம் இருந்தாலும், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, வட கடலோரத் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: CMDA விதிகளில் அதிரடி மாற்றம்.. ஒரே மாதத்தில் 17 உயரமான கட்டடங்களுக்கு அனுமதி!!
ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும்:
அதனைத் தொடர்ந்து, ஜூலை 28 மற்றும் 29ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஏனைய தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 30ஆம் தேதியைப் பொறுத்தவரையில், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மிதமான மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் மெட்ரோ பயணம் இன்னும் ஈசி… விரிவாக்கம் செய்யப்படும் 2 வழித்தடங்கள்.. எவை தெரியுமா?
ஜூலை 31ஆம் தேதியைப் பொறுத்தவரையில், கோவை, நீலகிரி மற்றும் தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை ஆகஸ்ட் 3ஆம் தேதியும் தொடரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2ஆம் தேதியைப் பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோரத் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.