சிக்கன் பிரியர்களுக்கு அதிர்ச்சி.. வரும் ஜூலை 31ஆம் தேதி முதல் கோழ்க்கறி விற்பனை நிறுத்தம்..
கறிக்கோழிகளுக்கு தீவன கட்டுப்பாடு நெறிமுறைகளை உற்பத்தியாளர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜூலை 31ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் காலவரையற்ற கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஜலை 27, 2026: வரும் ஜூலை 31ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கறிக்கோழி விற்பனை செய்யப்படாது என தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் 60,000 கறிக்கோழி இறைச்சிக் கடைகள் மூடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கறிக்கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனம் தொடர்பான கட்டுப்பாட்டு நெறிமுறைகள் முறையாகச் செயல்படுத்தப்படாததை கண்டித்து, ஜூலை 31ஆம் தேதி முதல் காலவரையற்ற கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கோழி வணிகர்கள் அறிவித்துள்ளனர்.
தீவன கட்டுப்பாடு நெறிமுறைகள் கடைபிடிக்க வேண்டும்:
தஞ்சாவூரில் நடைபெற்ற கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில், தமிழகம் முழுவதிலுமிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கறிக்கோழிகளுக்கு தீவனம் வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மண்டல மற்றும் மாவட்ட கால்நடைத் துறை அதிகாரிகளுக்கும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் படிக்க: தமிழகத்தில் இந்தாண்டும் உள்ளாட்சி தேர்தல் நடக்க சாத்தியமில்லை? ஏன் இந்த தாமதம்!
மேலும், கறிக்கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஜூலை 31ஆம் தேதி முதல் கோழிக்கறி விற்பனை நிறுத்தம்:
விற்பனைக்கு முன்பு கோழிகளுக்கு தீவனம் வழங்குவதால் அவற்றின் எடை அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் கோழிகளின் உடலில் தீவனம் தங்கி அஜீரணம் மற்றும் கழிவுகள் வெளியேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்படுவதாகவும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு.. சஸ்பெண்ட் சார்-பதிவாளரிடம் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை!
இந்த நெறிமுறைகளை உற்பத்தியாளர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜூலை 31ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் காலவரையற்ற கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.