கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் முதல்வர் திடீர் எண்ட்ரி.. அதிகாரிகள் ஷாக்!
Chief Minister Joseph Vijay Inspect : சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, அதிகாரிகளிடம் கழிவு நீர் சுத்திகரிப்பு உள்ளிட்டவை தொடர்பாக கேட்டறிந்தார் .
சென்னை மாவட்டம், கோயம்பேட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, முதல் அமைச்சர் ஜோசப் விஜய் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி இன்று திங்கள்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டார். இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையானது சுமார் 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அண்மையில், முதல்வர் விஜய் நகர்ப்புற கட்டமைப்பு, நீர் மேலாண்மை திட்ட பணிகள் விரிவு படுத்துவது தொடர்பாக நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு முக்கிய ஆதாரமாக இருக்கக்கூடிய நீர் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில், கோயம்பேட்டில் 45 எம். எல். டி. திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்
இந்த நிலையமானது சென்னை மாநகரத்தின் நீர் தேவையை சமாளிப்பதற்காக இந்த தொழில்நுட்பத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்காக முதல்வரின் இந்த ஆய்வின் போது, விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 45 எம் எல் டி திறன் கொண்ட ஆலையை 100 எம்எல்டி திறன் கொண்ட ஆலையாக மாற்றுவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். குடிநீர் வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்ததன் அடிப்படையிலும், இந்த ஆலையின் திறனை மேம்படுத்துவதும், அதன் அருகிலேயே அடுத்த கட்ட பணிகளை தொடங்குவது குறித்தும் குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோரிடம் அவர்கள் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்..தவெக அரசு வழங்கிய அரசு பணி ரத்து!
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆய்வு
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராகும் திட்டம் குறித்து ஆய்வு செய்திருந்தார். அப்போது இந்த துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருந்தார். மேலும், பல்வேறு அறிவுறுத்தல்களை துறை அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தார்.இதே போல, சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.
கட்டணம் அடிப்படையில் நீர் விநியோகம்
இந்த ஆய்வை தொடர்ந்து, மாணவர்கள் தெரிவித்த புகார்கள் மற்றும் கோரிக்கைகளை உடனடியாக சரி செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில், தற்போது கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் முதல்வர் விஜய் ஆய்வு நடத்தியுள்ளார். இந்த சுத்திகரிக்கப்பட்ட நீர்கள் அனைத்தும் அருகில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கட்டணத்தின் அடிப்படையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: கரூர் அரசு பணி ரத்து உத்தரவு… உச்சநீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்ய திட்டம்!