AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்..தவெக அரசு வழங்கிய அரசு பணி ரத்து!

Karur Govet Job Order Cancelled : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு வழங்கப்பட்ட அரசு பணிக்கான ஆணைகளை மதுரை உயர்நீதிமன்ற அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டது. இதில், நீதிபதிகள் காட்டமான கேள்விகளை எழுப்பினர் .

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்..தவெக அரசு வழங்கிய அரசு பணி ரத்து!
தவெக அரசு வழங்கிய அரசு பணிகள் ரத்து
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 27 Jul 2026 17:59 PM IST

கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் மேற்கொண்டிருந்த பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 31 பேருக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பணிகளுக்கான ஆணைகளை வழங்கி இருந்தனர். இந்த பணிகள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலையில் உள்ள பணிகள் ஆகும். இதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வீரன் திருமுருகன் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகி அகமது, வேடசந்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று திங்கள்கிழமை ( ஜூலை 27) நடைபெற்றது. மனுக்களை விசாரித்த நீதிபதி கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு வழங்கப்பட்ட அரசு பணிக்கான ஆணைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அரசுப் பணி விவகாரத்தில் நீதிபதிகள் காட்டமான கேள்வி

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற போது நீதிபதிகள் காட்டமான கேள்விகளை எழுப்பி இருந்தனர். இதில், அரசு தரப்பில் சாதாரணமாக பணி வழங்குவதாக கூறுவதை ஏற்க முடியாது. எந்த பணியும் சாதாரண பணி கிடையாது, அது ஒருவரின் குடும்பத்திற்கு உதவும் பணி ஆகும். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு பணி வழங்குவது என்றால் அரசு பேருந்து விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிகள் வழங்க முடியுமா. இதே போல, சிவகாசியில் அடிக்கடி விடுவிபத்து சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.  அவர்களுக்கு அரசு பணி வழங்க கோரினால் என்ன செய்வது.

மேலும் படிக்க: சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு தொல்லை.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்.. முழு விவரம் என்ன!

அனைவருக்கும் அரசுப் பணி வழங்க முடியுமா

தமிழகத்தில் இது போன்று பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவர்களுக்கெல்லாம் அரசு பணி வழங்க முடியுமா என்பன உள்ளிட்ட கேள்விகளை நீதிபதி எழுப்பி இருந்தார். மேலும், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவதற்கு பதிலாக திறன் வளர்ப்பு பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு உதவலாம் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அரசுப் பணிக்கான ஆணைகள் அனைத்தையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

முதல் ஊதியம் வாங்குவதற்கு முன்னதாக தீர்ப்பு

அரசு பணி ஆணைகளை முதல்வர் வழங்கிய நாளன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றிருந்தது. அப்போது, பணி நியமன ஆணைகள் பெற்றவர்கள் முதல் ஊதியம் பெறுவதற்கு முன்னதாகவே இந்த வழக்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். அதன் அடிப்படையில், நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சென்னையில் மெட்ரோ பயணம் இன்னும் ஈசி… விரிவாக்கம் செய்யப்படும் 2 வழித்தடங்கள்.. எவை தெரியுமா?

Follow Us