சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு தொல்லை.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்.. முழு விவரம் என்ன!
Chennai Corporation Mayor R. Priya : சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தனக்கு அடையாளம் தெரியாத நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவாதாக தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்து வருபவர் ஆர். பிரியா. இவர், சென்னை, வேப்பேரியில் செயல்பட்டு வரும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் அமல்ராஜை நேரில் சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னை தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தன்னை பற்றி புகைப்படத்துடன் அவதூறாக சித்தரித்து பரப்புவதாகவும், அத்துடன் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொல்லை கொடுப்பதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாட்ஸ் ஆப் – சமூக வலைதளங்களில் தொல்லை
சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு அடையாளம் தெரியாத நபர் சமூக வலைதளங்களில் அவதூரமான கருத்துக்களை பரப்புவதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மேயர் பிரியாவுக்கு கடந்த சில நாட்களாக அவரது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை அவதூறு பரப்பும் வகையில் சித்தரித்து சமூக வலைதளங்கள் மற்றும் அவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன், மேயர் பிரியாவின் அலுவலக எண்ணுக்கும் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: வேலூரில் விரைவில் விமான நிலையம் திறக்கப்படும்.. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்!




ஆவணங்களுடன் புகார் அளிப்பு
அதன் அடிப்படையிலேயே, சென்னை மேயர் பிரியா சென்னை காவல் ஆணையரத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகார் மனுவுடன் சித்தரிக்கப்பட்ட பிரியாவின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபரின் செல்போன் எண் உள்ளிட்ட ஆவணங்களையும் அதில் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் தற்போதைய மேயராக இருந்து வரும் பிரியா 49- ஆவது மேயர் அவர். இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்.
யார் இந்த மேயர் ஆர். பிரியா
கடந்த 2022- ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. நகரில் உள்ள 74- ஆவது கோட்டத்தில் வெற்றி பெற்று சென்னை மாநகராட்சியின் 49- ஆவது மேயராக ஆர். பிரியா பதவி ஏற்றார். சென்னை மாநகராட்சியின் வரலாற்றில் மே பதவியை பிடித்த முதல் தலித் பெண் மற்றும் இளைய வயது மேயர் என்ற பெருமையை ஆர். பிரியா பெற்றுள்ளார்.
மேலும் படிக்க: ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. எத்தனை மாவட்டங்களில் கனமழை இருக்கும்?