AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வேலூரில் விரைவில் விமான நிலையம் திறக்கப்படும்.. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்!

Vellore Airport Soon Will Be Open | வேலூரில் விரைவில் விமான நிலையம் திறக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வேலூரில் விரைவில் விமான நிலையம் திறக்கப்படும்.. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்!
வேலூர் விமான நிலையம் குறித்து எல்.முருகன் அப்டேட்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 27 Jul 2026 08:40 AM IST

வேலூர், ஜூலை 27 : வேலூரில் (Vellore) விரைவில் விமான நிலையம் திறக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் (Union Minister L Murugan) தெரிவித்துள்ளார். வேலூரில் நடைபெற்ற சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2026 நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வேலூர் விமான நிலையம் குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்படும் – எல்.முருகன்

வேலூரில் நேற்று (ஜூலை 26, 2026) சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2026 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய அவர், அதனை தொடர்ந்து வேலூர் வடக்கு மண்டலத்தில் பாரதிய ஜந்தா கட்சி நிர்வாகிகள் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதையும் படிங்க : ரூ.2500 மகளிர் உரிமை தொகை எப்போது வழங்கப்படும்.. அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஷாக் பதில்!

விமான நிலைய பணிகள் நிறைவு பெற போகின்றன – எல்.முருகன்

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவரிடம், வேலூர் விமான நிலையம் அமைக்கும் பணியின் முன்னேற்றம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் அளித்த அவர், வேலூர் விமான நிலையத்திற்கான பணிகள் நிறைவு பெற போகின்றன. இது குறித்து விமானத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன். மீதமுள்ள பணிகள் முடிந்ததும், வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெடிக்கப்போகும் வெடிகுண்டு.. தயாராகும் ஊழல் பட்டியல்.. நிதித்துறை அமைச்சர் அதிரடி!

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட மூன்று பகுதிகளில் மட்டுமே விமான நிலையங்கள் உள்ளன. இந்த நிலையில் தான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேலூரில் விரைவில் விமான் நிலையம் வரவுள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் விரைவில் தமிழகத்திற்கு மேலும் ஒரு விமான நிலையம் கிடைக்கும் பட்சத்தில், விமான போக்குவரத்து மிகவும் சுலபமானதாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us