விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்ப்பவர்களுக்கு இப்படிதான் இருக்கும் – இயக்குநர் ஓபன் டாக்
Director Venky Atluri talks about Vishwanath And Sons movie | இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ள நிலையில் இந்தப் படம் குறித்து இயக்குநர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார். தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் நிலையில் முன்னதாக இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கியப் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று ரசிகர்களிடையேயும் படக்குழுவினர் இடையேயும் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படத்திற்கான வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
அதன்படி படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான இரண்டாவது சிங்கிள் ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்ப்பவர்களுக்கு இப்படிதான் இருக்கும்:
அதன்படி இயக்குநர் வெங்கி அட்லூரி அளித்தப் பேட்டி ஒன்றில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தைப் பார்த்துவிட்டு பார்வையாளர்கள் புன்னகையுடன் திரையரங்கை விட்டு வெளியேறுவார்கள். படத்தின் இறுதிக்காட்சி உணர்வுப்பூர்வமான திருப்தியைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேடி (மாமிதா பைஜூ) அல்லது சஞ்சய் (சூர்யா) – இவர்களில் யாருடைய முடிவாக இருந்தாலும், அது சரியானதாகவே தோன்றும்; அத்துடன் மகிழ்ச்சிக் கண்ணீரை வரவழைப்பதாகவும் அமையும். சஞ்சய் விஸ்வநாத் கதாபாத்திரத்தை உருவாக்கும்போது, ஒரு ஆண் எதிர்கொள்ளக்கூடிய மிகக் கடினமான போராட்டங்களை அவன் கடந்து வருகிறான் என்பதை நான் உணர்ந்தேன். இப்படத்தைப் பார்த்த பிறகு, அவன் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் பின்னாலுள்ள காரணங்களை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Also Read… ராமாயணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது – நடிகர் யாஷ்
இணையத்தில் வைரலாகும் வெங்கி அட்லூரி பேச்சு:
#VenkyAtluri on #ViswanathAndSons
Audiences will leave the theatres with a smile. The climax is designed to feel emotionally satisfying. Whether it’s Maddie (#MamithaBaiju) or Sanjay (#Suriya), both outcomes will feel right and leave you with happy tears.
While writing Sanjay… pic.twitter.com/rIn5TOKwdh
— Movie Tamil (@_MovieTamil) July 26, 2026



