AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குடும்பங்கள் கொண்டாடிய தலைவன் தலைவி படம் ஒரு ஆண்டை நிறைவு செய்தது

Thalaivan Thalaivii movie completes one year today | தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் தலைவன் தலைவி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளதை படக்குழு கொண்டாடி வருகின்றது.

குடும்பங்கள் கொண்டாடிய தலைவன் தலைவி படம் ஒரு ஆண்டை நிறைவு செய்தது
தலைவன் தலைவிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jul 2026 13:51 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாண்டிராஜ். இவர் தமிழ் சினிமாவில் அதிக அளவில் ஃபேமிலி செண்டிமெண்ட் படங்களை இயக்கி ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறார். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படம் பரிமளா அண்ட் கோ. ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் டார்க் காமெடி பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஓடிடியில் வெளியாகி தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் ரசிகர்களும் இந்தப் படத்தை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் தலைவன் தலைவி. இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் இன்றுடன் ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது.

ஒரு ஆண்டை நிறைவு செய்தது தலைவன் தலைவி படம்:

நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை நித்யா மேனன் நாயகியாக நடித்து இருந்தார். இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக நடித்து இருந்த நிலையில் இந்தப் படம் குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் வெளியாகி ஒரு ஆண்டை நிறைவடைந்ததைப் படக்குழு தற்போது கொண்டாடி வருகின்றது.

Also Read… தீபா பாலுவை தொடர்ந்து… ஹார்ட் பீட் வெப் சீரிஸிலிருந்து அடுத்ததாக வெளியேரிய பிரபல நடிகை!

தலைவன் தலைவி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… லவ் ஓ லவ் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Follow Us