அந்த விசயத்திற்கு சூர்யா சார் சம்மதித்தது ஆச்சரியாமாக இருந்தது – இயக்குநர் வெங்கி அட்லூரி
Director Venky Atluri talks about Suriya | தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தின் இயக்குநர் சூர்யா குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தமிழ் ரசிகர்களிடையே மட்டும் இன்றி தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கருப்பு. இந்தப் படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. மேலும் நடிகர் சூர்யா நடிப்பில் இதுவரை வசூல் செய்ததைவிட அதிக அளவில் வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.
இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார். மேலும் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.




அந்த விசயத்திற்கு சூர்யா சார் சம்மதித்தது ஆச்சரியாமாக இருந்தது:
சூர்யா சார் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஆச்சரியமாக இருந்தது. ஆரம்பத்தில் நான் அவரிடம் கதையைச் சொன்னபோது, அது ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படமாகவே (biopic) திட்டமிடப்பட்டிருந்தது. அந்த யோசனை சூர்யா சாருக்குப் பிடித்திருந்தது, அவரும் அதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஆனால், அந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கான உரிமைகளைப் பெறுவதில் சிக்கல்கள் எழுந்தன. அதே வேளையில், ஒரு குடும்பப் படத்தில் நடித்து ஏறக்குறைய 14 ஆண்டுகள் ஆகிவிட்டதால், ஒரு குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படத்தில் நடிக்கவும் சூர்யா சார் விரும்பிக்கொண்டிருந்தார். அவர் என்னிடம், “நான் ஏற்கனவே சமீபத்தில் ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்திருக்கிறேன். அதோடு, இதற்கான உரிமைகளைப் பெறுவதும் கடினமாக உள்ளது. அதற்குப் பதிலாக, இதமான ஒரு நல்ல குடும்பக் கதை ஏதேனும் உங்களிடம் இருக்கிறதா?” என்று கேட்டார். அதன்பிறகுதான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் உருவானது என்று தெரிவித்துள்ளார் வெங்கி அட்லூரி.
Also Read… இன்னைக்குதான் பொங்கல்… ஜன நாயகன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள் – வைரலாகும் பதிவுகள்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Dir #VenkyAtluri
– It was surprising that #Suriya sir agreed to do this film. Initially, when I narrated the story to him, it was conceived as a biopic. Suriya sir liked the idea and was very interested.
– However, there were issues in acquiring the rights for the biopic. At… pic.twitter.com/Qt0ymsKMTv
— Movie Tamil (@_MovieTamil) July 23, 2026
Also Read… Vimal: காசோலை மோசடி.. நடிகர் விமலுக்கு சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்!