AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vimal: காசோலை மோசடி.. நடிகர் விமலுக்கு சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்!

Actor Vimal Faces Prison: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் விமல். தொடர்ந்து ஆக்ஷன் மற்றும் காமெடி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் இவர் மீது காசோலை மோசடி புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அது இன்று விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை நீதிமன்றம் நடிகர் விமலுக்கு சிறை தண்டனையை வழங்கியுள்ளது.

Vimal: காசோலை மோசடி.. நடிகர் விமலுக்கு சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்!
நடிகர் விமல்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 23 Jul 2026 15:17 PM IST

கோலிவுட் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், மக்கள் மத்தியில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் விமல் (Actor Vimal). இவர் 2000ம் ஆண்டு தொடக்க காலத்தில் சிறப்பாக படங்களில் நடித்தது ஹிட் கொடுத்திருந்தார். கலகலப்பு (Kalakalappu), களவாணி (Kalavani), வாகை சூடவா, மஞ்சப்பை மற்றும் கேடி பிள்ளை கில்லாடி ரங்கா போன்ற ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அந்த வரிசையில், கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த ஹிட்டை பெறவில்லை. இருந்தாலும், தொடர்ந்து படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலத்தைப் பெற்றிருந்தார். இந்நிலையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் வடம் (Vadam). கடந்த மார்ச் 2026ம் ஆண்டில் வெளியான இப்படமானது இவருக்கு கலவையான விமர்சனங்களையே கொடுத்தது.

பெரிதாக எந்த சட்ட சிக்கல்களில் சிக்காத விமலுக்கு புது பிரச்சனை. தற்போது இவருக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளது. கடன் தொடர்பான காசோலை மோசடி வழக்கில், நடிகர் விமலுக்கு தண்டனையை வழங்கியுள்ளது சென்னை நீதிமன்றம். இது தற்போது சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விமலின் ரசிகர்கள் மத்திய அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: ரவி மோகனின் புதுப் பட நாயகி இவரா? வைரலாகும் தகவல்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை:

நடிகர் விமல், கடந்த 2018ம் ஆண்டில் வெளியான மன்னர் வகையார் படத்தின் தயாரிப்பிற்காக அவர் கடன் வாங்கியுள்ளாராம். அப்படத்திற்காக சுமார் ரூ 4.5 கோடிகளை கடனாக பெற்றிருந்தக விமல், அதை திருப்பிக் கொடுக்கும் வகையில் ரூ 4.5 கோடியை காசோலையாக வழங்கியுள்ளாராம். அவர் வழங்கிய காசோலை வங்கியில் பணமில்லாத நிலையில், அது பவுன்ஸ் ஆனதாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: இன்னைக்குதான் பொங்கல்… ஜன நாயகன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள் – வைரலாகும் பதிவுகள்

கடன் கொடுத்த பைனாசியர் தொடர்ந்த வழக்கில், ஓராண்டு சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேல் முறையீடு செய்யும் வகையில் தண்டனை ஒரு மாதம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாம். தற்போது இந்த தகவலானது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விமல் சிறை தண்டனை குறித்து இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு:

நடிகர் விமல் மீது தொடரப்பட்ட வழங்கில், ஓராண்டு சிறை தண்டனை என தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து மேல்முறையீடு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us