தீபா பாலுவை தொடர்ந்து… ஹார்ட் பீட் வெப் சீரிஸிலிருந்து அடுத்ததாக வெளியேரிய பிரபல நடிகை!
Heart Beat Season 3: தமிழ் மற்றும் சின்னத்திரை மக்கள் மத்தியில் பிரபலமான வெப் தொடராக இருந்துவருவது ஹார்ட் பீட் வெப் தொடர். இந்த தொடரிலிருந்து ஏற்கனவே நடிகை தீபா பாலு வெளியேறியிருந்த நிலையில், மேலும் தற்போது இந்த வலைத் தொடரிலிருந்து பிரபல நடிகை ஒருவர் வெளியேறியுள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான வலைத் தொடர்தான் ஹார்ட் பீட் (Heart Beat). இந்த வெப் தொடரானது ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) தொலைக்காட்சியில் அடைந்த 2024ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த வெப் தொடராக கிட்டத்தட்ட 2 சீசன்களாக 200 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிவருகிறது. இதில் நடிகை தீபா பாலு (Deepa balu), அனுமோல் (Anumol) மற்றும் பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். மருத்துவம், காதல் மற்றும் அப்பா மக்கள் எமோஷனல் போன்ற கதைக்களத்தில் இந்த வெப் தொடரானது ஒளிபரப்பாகிவந்தது. தற்போது ஹார்ட் பீட் சீசன் 3 (Heart Beat Season 3) தொடரானது ஓடிடியில் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில், இந்த சீஸனின் ஷூட்டிங் முடிந்த நிலையில், ரீனாவாக நடித்த தீபா பாலு இந்த வெப் தொடரிலிருந்து வெளியேறிவிட்டார்.
அந்த வகையில் அவருடன் மேலும் ஒரு பிரபல நடிகை இந்த வெப் தொடரிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அது வேறுயாருமில்லை நடிகை யோகலட்சுமி தான். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹார்ட் பீட் சீசன் 3 தொடருக்கு பின் விலகுவதாக கூறியிருக்கிறார். அது வேறுயாருமில்லை நடிகை யோகலட்சுமிதான் (Yogalakshmi).




இதையும் படிங்க: ரன்பீர் கபூர் – சாய் பல்லவியின் ராமாயணா 1 பட ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்திவைப்பு.. காரணம் இதுதான்!
ஹார்ட் பீட் வெப் தொடரிலிருந்து விலகுவது குறித்து நடிகை யோகலட்சுமி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
அந்த பதிவில் நடிகை யோகலட்சுமி, இதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கலாம் என்று எனக்குத் தெரியும். நண்பர்களே, நான் மிகவும் வருந்துகிறேன். கனத்த இதயத்துடன், நான் இனி “ஹார்ட் பீட்” தொடரின் ஒரு பகுதியாக இல்லை என்பதை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியுள்ளது. இது எனக்கும் எளிதாக இருக்கவில்லை, ஆனால் இந்த வாய்ப்பிற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன், நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: லீக்கானாலும் பீக் குறையல.. ஜன நாயகன் பட முதல் நாள் தமிழக வசூல் எவ்வளவு தெரியுமா?
நடிகை யோகலட்சுமி தமிழில் நடித்துள்ள படங்கள்:
நடிகை யோகலட்சுமி அபிஷன் ஜீவிந்த் இயக்கிய டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தின் மூலம் நடிகையாக நுழைந்தார். இந்த படத்திற்கு பின், தமிழில் இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் அரசன் படத்தில் நாயகியாக நடித்துவருகிறார். இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இதற்க்கு பின் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடிக்கும் புது படத்தில் நாயகியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.