சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி.. அட இந்த தொடரிலா?
Anitha Sampath New Serial: செய்திவாசிப்பு மற்றும் திரைப்படங்கள் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக பணியாற்றி மிகவும் பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான நிலையில், தற்போது இவர் சீரியலில் நடிகையாக என்ட்ரி கொடுக்கிறாராம். அது எந்த சீரியல் என விவரமாக பார்க்கலாம்.
தமிழ் மக்கள் மத்தியில் செய்தி வாசிப்பாளராக மிகவும் பிரபலமானவர் அனிதா சம்பத் (Anitha Sampath). இவர் சினிமாவில் நடிகையாகவும் சில வேடங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக (Newsreader) தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், தற்போது பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் (Tv Host) பணியாற்றிவருகிறார். இவர் சின்னத்திரை சீரியல்களிலும் சில தோற்றங்களில் நடித்துள்ளார். இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய நிலையில், பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார். 2020ம் ஆண்டில் ஒளிபரப்பப்பட்டவந்த பிக் பாஸ் சீசன் 4 (Bigg Boss 4 tamil) நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். இந்த பிக் பாஸுக்கு பின், யூடியூப் மற்றும் புரொமோஷன்கள் மூலம் தனது பிஸினஸை மேம்படுத்திவருகிறார்.
அந்த வகையில், இவர் தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக நடிக்கவுள்ளாராம். அவர் எந்த சீரியலில் நடிக்கவுள்ள, எந்த தொலைக்காட்சியில் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: பகவந்த் கேசரி ரீமேக்.. அந்த காட்சிகள் இன்னும் தொந்தரவு செய்ததாக முதல்வர் விஜய் சொன்னாரு – இயக்குநர் அனில் ரவிபுடி!
அனிதா சம்பத் நடிக்கவுள்ள பிரபல சீரியல்:
செய்திவாசிப்பாளராக இருந்து பின் பிக் பாஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் மக்கள் மத்தியில் அனிதா சம்பத் பிரபலமானார். இவர் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்துவருகிறார். அந்த வகையில், இவர் தற்போது ஜீ தமிழில் சீரியல் ஒன்றில் நடிக்கவுள்ளாராம்.
இதையும் படிங்க: ஜன நாயகன் படம் லீக்கான போது பிரபல நடிகர் என்ன சந்தித்து ஆதரவாக பேசினார் – தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா
தனது சொந்த பிஸ்னஸ் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கவனம் செய்துட்டிவந்த அனிதா சம்பத் சீரியலில் களமிறங்கவுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் சின்னசிறு கிளியே என்ற சீரியலில் நடிக்கவுள்ளாராம். இது குறித்த இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.
அனிதா சம்பத் நடிக்கவுள்ள புது சீரியல் குறித்து வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
ஏற்கனவே பல்வேறு இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் மற்றும் பிக் பாஸ் பிரபலங்களும் சீரியலில் களமிறங்கியுள்ளனர். அதுபோலவே அனிதா சம்பத்தும் சீரியலில் நடிக்கவுள்ளாராம். கடந்த 2024ல் வெளியான பிக் பாஸ் சீசன் 8ல் வந்த ரியா தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டுவரும் காதல் காதல் காதல் என்ற சீரியலில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்துவருகிறார். அதுபோல அனிதா சம்பத்தும் சீரியலில் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிக்கவுள்ள சின்னசிறு கிளியே என்ற சீரியல், திங்கள் முதல் சனி வரை 7 மணியளவில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவருகிறது.