AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஷாக்கான விஷயத்தை சொன்ன தொகுப்பாளினி பிரியங்கா.. சோகத்தில் ரசிகர்கள்!

Host Priyanka Deshpande: தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிரபல தொகுப்பாளினியாக பணியாற்றிவந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக பணியாற்றிவரும் நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சியான விஷயம் ஒன்றை தெரிவித்துள்ளார். அது என்ன என்பது பற்றி முழு விவரமாக பார்க்கலாம்.

ஷாக்கான விஷயத்தை சொன்ன தொகுப்பாளினி பிரியங்கா.. சோகத்தில் ரசிகர்கள்!
பிரியங்கா தேஷ்பாண்டேImage Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 20 Jul 2026 18:02 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் (Star Vijay Tv) பிரபல தொகுப்பாளினியாக பணியாற்றிவந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே (Hostness Priyanka Deshpande). இவர் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக பணியாற்றிவந்தார். ஆரம்பத்தில்;சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றிவந்த நிலையில், அதன் பிறகு முழுவதுமாக விஜய் டிவியிலே செட்டிலாகிவிட்டார். சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் (Start Music), டான்ஸ் ஜோடி டாட்ஸன் மற்றும் பல்வேறு சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்துவருகிறார். அண்மையில் பிரியங்கா, தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். கர்ப்பமாக இருக்கும்போதிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுப்பாளராகவும் தொகுத்து வழங்கிவருகிறார்.

இந்நிலையில் இவரின் தொகுப்பில் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்துவருவதுதான் ஹேப்பி வைப் ஹேப்பி லைப். இந்த நிகழ்ச்சியானது சிறப்பாக ஒளிபரப்பப்பட்டுவரும் நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சி குறித்து அதிர்ச்சியான தகவலை பிரியங்கா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ராமாயணா பட டிரெய்லரைப் பார்த்து நான் மிகவும் பிரமித்துப்போனேன் – இயக்குநர் அட்லி

ரசிகர்களுக்கு பிரியங்கா சொன்ன ஷாக் விஷயம்:

சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டு ஹேப்பி வைப் ஹேப்பி லைப் ஷோவில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான விஷயத்தை பிரியங்கா அக்கூறியுள்ளார். அந்த நிகழ்ச்சியின் முடிவில், இந்த ஷோதான் கடைசி நிகழ்ச்சி என அதில் அவர் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 4 மாதத்திலே முடிவடைந்துள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் மத்தியில் இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹேப்பி வைப் ஹேப்பி லைப் நிகழ்ச்சியின் ப்ரோமோ குறித்த வீடியோ:

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

ஹேப்பி வைப் ஹேப்பி லைப் நிகழ்ச்சி:

விஜய் தொலைக்காட்சியில் வாரம்தோறும் வெளியாகிவரும் ரியாலிட்டி ஷோதான் ஹேப்பி வைப் ஹேப்பி லைப். இந்த நிகழ்ச்சியில் கணவன் மனைவி என இருவரும் கலந்துகொள்வார்கள். பிரபலங்கள் ஜோடி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் மொத்தம் மூன்று ஜோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு விஷயங்களை செய்துவருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: AK64 படத்தின் ஷூட்டிங்கில் எப்போது இணைவார் அஜித்? – இணையத்தில் வைரலாகும் தகவல்!

இந்நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவந்த நிலையில், 4 மாதத்திலே முழுமையாக நிறைவடைந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரியங்கா மோகன் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவர் தொகுத்துவரும் நிகழ்ச்சிகளை குறைத்து வருகிறாராம். இன்னும் சில மாதங்களில் அவர் சின்னத்திரை தொகுப்பாளராக சில மாதங்கள் பிரேக் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us