பகவந்த் கேசரி ரீமேக்.. அந்த காட்சிகள் இன்னும் தொந்தரவு செய்ததாக முதல்வர் விஜய் சொன்னாரு – இயக்குநர் அனில் ரவிபுடி!
Anil Ravipudi Shares CM Vijays Appreciation: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இயக்குநாராக இருந்துவருபவர் அனில் ரவிபுடி. இவரின் இயக்கத்தில் பகவந்த் கேசரி படமானது வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. இதன் தமிழ் ரீமேக்காக ஜன நாயகன் உருவாகியுள்ள நிலையில், முதல்வர் விஜய் தன்னிடம் பாராட்டி சொன்ன விஷயத்தை இயக்குநர் அனில் ரவிபுடி பகிர்ந்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்தவருபவர்தான் அனில் ரவிபுடி (Anil Ravipudi). இவரின் இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் நந்தமுறி பாலகிருஷ்ணா முதல் சிரஞ்சீவி (Chiranjeevi) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் இவரின் இயக்கத்தில் தற்போது புதிதாக படம் உருவாகிவருகிறது. இதில் வெங்கடேஷ், கீர்த்தி சுரேஷ் மற்றும் கிரிதி ஷெட்டி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துவருகிறார். இந்த படமானது காதல் மற்றும் காமெடி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறது. இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் 2023ம் ஆண்டில் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்றிருந்த திரைப்படம்தான் பகவந்த் கேசரி (Bhagavanth Kesari).
பாலகிருஷ்ணா மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்ட பிரபலங்கள் இதில் நடிக்க சிறப்பான வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இதன் தமிழ் ரீமேக்காகத்தான் முதல்வர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் (Jana Nayagan) படமானது உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் அனில் ரவிபுடி, முதல்வர் விஜய் தன்னை அழைத்து பாராட்டிய விஷயம் குறித்து பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: காசோலை மோசடி.. நடிகர் விமலுக்கு சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்!
முதல்வர் விஜய் தன்னை அழைத்து பாராட்டிய விஷயம் குறித்து பகிர்ந்த இயக்குனர் அனில் ரவிபுடி:
அந்த பேட்டியில் பேசிய அனில் ரவிபுடி, “முதல்வர் விஜய் சார், பகவந்த் கேசரி திரைப்படத்தைப் பார்த்ததாகவும், அது அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் என்னிடம் கூறினார். நான் சிறப்பாக இயக்கியுள்ளதாகவும், அப்படத்தின் சில காட்சிகள் இன்னும் அவரைத் தொந்தரவு செய்வதாகவும் சொன்னார். எனது வேலையைப் பாராட்டுவதற்காக அவர் தனிப்பட்ட முறையில் அழைத்தார். அதற்கு பின்னர், நான் மகேஷ் பாபு சாரை அழைத்து, எனக்குக் கிடைத்த அற்புதமான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டேன்.
இதையும் படிங்க: சூர்யா பர்த்டே ஸ்பெஷல்… போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்தும் படக்குழு
முதல்வர் விஜய் சார், அந்தப் படத்தை ரீமேக் செய்ய விரும்பியதால், நான் உடனடியாக அதன் உரிமைகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். ஒரிஜினல் படத்தில் 10% மட்டுமே தக்கவைக்கப்பட்டாலும், அதை அவர்கள் எடுத்துக்கொள்ள அனுமதிப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. இந்த ரீமேக் எனது படத்தின் சில கூறுகளால் ஈர்க்கப்பட்டிருந்தாலும், இது ஒரு வேறுபட்ட கதையையும் சொல்கிறது” என அதில் அவர் கூறியுள்ளார்.
முதல்வர் விஜய் அழைத்து பாராட்டிய தருணம் குறித்து அனில் ரவிபுடி சொன்னது தொடர்பாக இணையத்தில் வைரலாகும் பதிவு:
#CMVijay told me he watched #BhagavanthKesari and loved it. He said I had done a great job, and that a few episodes from the film were still haunting him. He personally called to appreciate my work. Later, I called #MaheshBabu sir and shared the wonderful experience I had. He… pic.twitter.com/PB1FZj10ZB
— Movies Singapore (@MoviesSingapore) July 22, 2026
ஜன நாயகன் படமானது, இன்று 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியோட உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்த படமானது சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிலையில், சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. இப்படமானது முதல் நாளிலே சுமார் ரூ 75 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை செய்யும் என கூறப்படுகிறது.