ஹார்ட் பீட் வெப் தொடரிலிருந்து வெளியேறிய முக்கிய நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Heart Beat web series: தமிழ் ரசிகர்கள் மற்றும் வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடராக இருப்பது ஹார்ட் பீட். இந்த வெப் தொடரானது சீசன் 2 முடிந்து சீசன் 3 விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. தற்போது இந்த வெப் தொடரிலிருந்து முக்கிய நடிகை விளக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். அது எந்த நடிகை என விவரமாக பார்க்கலாம்.
சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான வலைத் தொடராக (Web Series) இருந்துவருவதுதான் ஹார்ட் பீட் (Heart Beat). இந்த வெப் தொடரானது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hot Star) ஓடிடியில் இந்த தொடரானது வெளியாகிவரும் நிலையில், நல்ல வரவேற்பை பெற்றுவந்தது. கடந்த 2024ம் ஆண்டில் இந்த வெப் தொடர் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 2 சீசன்களாக சிறப்பாக வெளியாகிவந்தது. இந்த வெப் தொடரானது மெடிக்கல் மற்றும் காதல் கதைக்களத்தில் வெளியாகிவந்தது. ஒவ்வொரு சீசனுக்கு கிட்டத்தட்ட 100 எபிசோடுகள் வெளியாகிய நிலையில், இதுவரை மொத்தம் 200 எபிசோடுகள் வெளியாகியிருக்கிறது.
சீசன் 3ன் (Heart Beat Season 3) ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நிலையில், 2026ம் ஆண்டு ஜூலை மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இதன் மீதான ஆர்வமும் அதிகமாக உள்ளது. அந்த வகையில் தற்போது இந்த வெப் தொடரிலிருந்து முக்கிய நடிகை ஒருவர் விளக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.




இதையும் படிங்க: விஜய் சேதுபதி – சாய் பல்லவி படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடிகளுக்கு விற்பனையா? வைரலாகும் தகவல்
ஹார்ட் பீட் தொடரிலிருந்து வெளியேறிய முக்கிய நடிகை:
இந்த ஹார்ட் பீட் வெப் தொடரில், “ரீனா” என்ற வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தீபா பாலு. இவர் இந்த வெப் தொடரின் மெயின் கதாபாத்திரம் என்று கூறலாம். இவர் கிட்டத்தட்ட 2 சீசன்களில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது இந்த வெப் தொடரிலிருந்து விலகியுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: அப்படி ஒருவருடன் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை.. திருமணம் குறித்து வெளிப்படையாக பகிர்ந்த ஐஸ்வர்யா லெக்ஷ்மி!
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இந்த அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை கொடுத்துள்ளார். இது இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹார்ட் பீட் வெப் தொடரிலிருந்து விலகிய நடிகை தீபா பாலு குறித்த எக்ஸ் பதிவு:
#DeepaBalu exits the #HeartBeat series.
ரீனா கதாபாத்திரம் இவங்கள தவிர வேற யார் நடிச்சாலும் self எடுக்காது pic.twitter.com/p5ob77cKjv
— KUDALINGAM MUTHU (@KUDALINGAM49671) June 30, 2026
அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “சில இடங்களில், சில மனுஷங்கள விட்டுப்போறது ஈஸி இல். அது சில “குட் பாய்” நம்ம நல்லதுக்காகத்தான். மிக்க நன்றி” என அந்த பதிவில் அவர் க்கூறியிருக்கிறார். இது தற்போது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலரும் அவரின் சமூக ஊடக பக்கத்தில் கருத்துக்களை வெளிப்படுத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.