காதல் காதல் காதல் சீரியல் எப்போது தொடங்குகிறது? தேதி மற்றும் நேர விவரம் இதோ!
Kadhal Kadhal Kadhal Serial: விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து சீரியல் நிறைவடைந்து வருகிறது. அந்த வகையில் புது புது சீரியல்கள் வருகிறது. அதில் ஒன்றுதான் காதல் காதல் காதல் சீரியல். இந்த சீரியலின் கதை மற்றும் ஒளிபரப்பு தேதி குறித்து புது புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
தமிழில் பிரபல சின்னத்திரை தொலைக்காட்சியாக இருந்துவருவது விஜய் டிவி (Vijay TV). இந்த தொலைக்காட்சியில் சீரியல்கள் முதல் ரியாலிட்டி நிகழ்ச்சிவரை பல ஒளிபரப்பாகிவருகிறது. மேலும் 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இரு சீரியல்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் மேலும் புது சீரியல்களை ஒளிபரப்பாக தயாராகிவருகிறது. விஜய் டிவியில், தற்போது அய்யனார் துணை (Ayyanar Thunai) என்ற சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ள நிலையில், இந்த சீரியலுக்கு போட்டியாக இரு சீரியல்கள் இறங்குகிறது. அதுதான் ஒண்ணா இருக்க கத்துக்கணும் (Onna Irukka Kaththukanum) மற்றும் காதல் காதல் காதல் (Kadhal Kadhal Kadhal) போன்ற சீரியல்கள்.
இந்த சீரியல்களில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவரும் சீரியல்தான் காதல் காதல் காதல் சீரியல். இதில் பாரதி கண்ணம்மா சீரியல் அருண் முக்கிய நாயகனாக நடிக்க, கிட்டத்தட்ட 3 காதலை மையமாக கொண்டு இந்த் சீரியல் இயக்கப்பட்டுவருகிறது.தற்போது இந்த சீரியலில் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரத்துடன் கூடிய புது புரோமோ வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: SK-வின் படத்திலிருந்து எஸ்கேப்பான வெங்கட் பிரபு.. அடுத்த படம் இவருடனா?
காதல் காதல் காதல் சீரியல் ஒளிபரப்பு நேரம் மற்றும் தேதி குறித்த விவரம் :
இந்த் காதல் காதல் காதல் சீரியலானது மூன்று அண்ணன் மற்றும் தம்பிகளை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறது. இதில் காதலே பிடிக்காத தந்தையின் கீழ் வளரும் இவர்கள் எவ்வாறு காதலில் விழுகிறார்கள் என்பதே இந்த் சீரியலின் கதையாக உள்ளது. இதில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா மூன்று ஹீரோக்களின் அம்மாவாக நடித்துவருகிறார்.
இதையும் படிங்க: மகேஷ் பாபுவின் வாரணாசி படத்தின் ஷூட்டிங் எபோது முடியும்? வைரலாகும் தகவல்
இந்த சீரியலானது குடும்பம் மற்றும் காதல் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருவரும் நிலையில், ஒளிபரப்பு தேதி வெளியாகியிருக்கிறது. அதன்படி வரும் 2026ம் ஆண்டு ஜூலை 6ம் தேதியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
காதல் காதல் காதல் சீரியல் ஒளிபரப்பு தேதி குறித்த புது புரோமோ எக்ஸ் பதிவு:
பாருங்க செல்லத்துக்கு ஒண்ணுமே தெரியல 😆| Kadhal Kadhal Kadhal
காதல் காதல் காதல்..❤️
ஜூலை 6 முதல் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #KadhalKadhalKadhal #VijayTV #VijayTelevision pic.twitter.com/TqIttuoZwX— Vijay Television (@vijaytelevision) June 27, 2026
இந்த சீரியல் வரும் 2026ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி முதல் ஒளிபரப்பாகி தயாராகிவரும் நிலையில், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியலும் விரைவில் விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங் போட்டியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.