AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய் டிவியில் புது சீரியலில் இணைந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா.. அட இந்த சீரியல்தான்!

Suchitra Shetty New Serial: தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. அதில் சீரியலில் மெயின் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சுசித்ரா ரெட்டி. பாக்கிய லட்சுமி சீரியலானது நிறைவடைந்த நிலையில், மீண்டும் விஜய் டிவியில் புது சீரியலில் இணைந்துள்ளார். அது எந்த சீரியல் என பார்க்கலாம்.

விஜய் டிவியில் புது சீரியலில் இணைந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா.. அட இந்த சீரியல்தான்!
சுசித்ரா ஷெட்டியின் புதிய தொடர்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 22 Jun 2026 17:22 PM IST

தமிழில் ஒரு நேரத்தில் மிகவும் பிரபலமான சீரியலாகவும், டிஆர்பியில் அதிகம் ரேட்டிங் பெற்றிருந்த சீரியலாகவும் இருந்ததுதான் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi). இந்த சீரியலில் மெயின் ரோலான பாக்கிய லட்சுமி என்ற வேடத்தில் நடித்தவர்தான் நடிகை சுசித்ரா ரெட்டி (Suchitra Shetty). இவர் பிரபல தெலுங்கு சீரியல் நடிகை. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சைவம் (Saivam) என்ற படத்தில் இவர் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். இவ்வாறு சினிமாவில் நடித்துவந்த இவருக்கு, தமிழ் மக்கள் மத்தியில் நெருக்கத்தை தந்த சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலானது 2020ம் ஆண்டில் தொடங்கிய நிலையில், கடந்த 2025ம் ஆண்டுடன் முழுமையாக நிறைவடைந்தது.

இந்த சீரியலுக்கு பின் நடிகை சுசித்ரா எந்த சீரியலில் நடிக்கிறார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த வகையில் தற்போது மீண்டும் விஜய் டிவியில் (Vijay Tv) அவர் புது சீரியல் ஒன்றில் இணைந்துள்ளார். அது எந்த சீரியல் தெரியுமா?. வேறெதுவும் இல்லை, “காதல் காதல் காதல்” (Kadhal Kadhal Kadhal) என்ற புது சீரியலில்தான். இந்த சீரியலில் இவர் புதுவிதமான வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: என்னோட ஆக்சிஜனே தமிழ் ரசிகர்கள்தான்.. நூறு சாமிக்கு கிடைத்த வரவேற்பிற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த ஸ்வாசிகா!

காதல் காதல் காதல் சீரியலில் இணைந்த பாக்கியலட்சுமி சீரியல் புகழ் சுசித்ரா:

இந்த காதல் காதல் காதல் சீரியலானது, ஒரே சீரியலில் மூன்று காதலை காண்பிக்கும் ஒரு தொடராக அமைந்துள்ளது. இந்த சீரியலில் பாரதி பக்கண்ணமா சீரியல் புகழ் அருண் குமார் நடிக்கும் நிலையில், மற்றதெல்லாம் புது முக நடிகர்கள் நடிக்கிறார்கள். இதில் நடிகை சுசித்ரா இணைத்துள்ள நிலையில், மேலும் பாக்கிய லட்சுமி சீரியலில் கோபி என்ற வேடத்தில் நடித்திருந்த நடிகர் சந்திரசேகரும் இணைந்து முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த சீரியல் தொடர்பான புரோமோக்கள் வெளியாகிவருகிறது.

இதையும் படிங்க: லேடி லியோதாஸ் சமந்தா.. எங்கள் தங்கம் பட 3வது நாள் வசூல் இத்தனை கோடியா?

காதல் காதல் காதல் சீரியல் நடிகர்களுடன் சுசித்ரா இருக்கும் புகைப்படம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

இந்த காதல் காதல் காதல் சீரியலானது சிறப்பாக தயாராகிவருகிறது. இந்த சீரியல் மூன்று காதலை மையமாக கொண்டு இயக்கப்பட்டோஇருக்கும் நிலையில், இன்னும் எப்போது ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்படவில்லை. வித்தியாசமான கதையில், கிட்டத்தட்ட விஜய் டிவியில் முன்பு ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலை போலவே இந்த சீரியலும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us