AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Samantha: லேடி லியோதாஸ் சமந்தா.. எங்கள் தங்கம் பட 3வது நாள் வசூல் இத்தனை கோடியா?

Engal Thangam 3-Day collection: சமந்தாவின் நடிப்பில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பின் திரையரங்குகளில் நேரடியாக வெளியான படம்தான் எங்கள் தங்கம் (மா இன்டி பங்காரம்). இப்படமானது 2026ம் ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியான நிலையில், இன்றுடன் 3 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதுவரை எவ்வளவு இப்படம் வசூலித்துள்ளது என படக்குழு வெளியிட்டுள்ளது.

Samantha: லேடி லியோதாஸ் சமந்தா.. எங்கள் தங்கம் பட 3வது நாள் வசூல் இத்தனை கோடியா?
எங்க தங்கம் படத்தின் 3 நாள் வசூல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Jun 2026 14:32 PM IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகியாக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu). இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் நேரடியாக வெளியாகியுள்ளாள் படம்தான் எங்கள் தங்கம் (Engal Thangam). இந்த படமானது தெலுங்கில் மா இன்டி பங்காராம் (Maa Inti Bangaaram)என்ற டைட்டிலில் வெளியானது. இந்த படத்தில் சமந்தா லீட் ஆக்ஷன் நடிகையாக நடிக்க, அவருடன் பல்வேறு திரை பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார். இதை ஹோ பேபி என்ற படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்க, சமந்தா மற்றும் ராஜ் நிதிமோரு (Raj Nidimoru) இணைந்து தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு தமிழ் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையமைத்துள்ள நிலையில், பாடல்களும் சிறப்பாக உருவாகியுள்ளது.

இந்த படம் அதிரடி ஆக்ஷன் குடும்ப கதையில் கடந்த 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் 3வது னால முடிவில் இப்படம் உலகமெங்கும் எவ்வளவு வசூலித்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மூன்று வேடத்தில் விஷால்.. முடிவடைந்தது மகுடம் திரைப்படத்தின் ஷூட்டிங்!

விரைவில் ரூ 50 கோடியை நெருங்கும் சமந்தாவின் எங்கள் தங்கம்:

இந்த படமானது ஒரு பேமிலி பேக்ரவுண்ட் ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கிறது. இதில் சமந்தா ஆக்ஷன் நாயகியாக சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். இவரை தமிழ் ரசிகர்கள் லேடி லியோ தாஸ் என, தளபதி விஜய்யுடன் ஒப்பிட்டு வருகிறார்கள். ஒரு அதிரடி நாயகி தனது குடும்பத்தை காக்க, மீண்டும் அதிரடியில் இறங்கும் கதைக்களத்தில் மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: என்னோட ஆக்சிஜனே தமிழ் ரசிகர்கள்தான்.. நூறு சாமிக்கு கிடைத்த வரவேற்பிற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த ஸ்வாசிகா!

இப்படமானது மூன்று நாட்கள் முடிவில் உலகமெங்கும் இதுவரை சுமார் ரூ43 கோடிகளை வசூலித்துள்ளதாம். இப்படம் முதல் நாளிலே ரூ13.15 கோடிகளும், 2வது நாளில் சுமார் ரூ28 கோடிகளுக்கு மேல் வசூலித்த நிலையில், மூன்றாவது நாளில் ரூ 43 கோடியை நெருங்கியுள்ளது. விரைவில் இப்படம் ரூ 50 கோடியை கடந்துவிடும் என கூறப்படுகிறது.

சமந்தாவின் எங்கள் தங்கம் பட 3வது நாள் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிவரும் நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த வரவேற்புடன் தற்போது சமந்தா கர்ப்பமாக இருப்பதாகவும் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது. எங்கள் தங்கம் பட வெற்றி கொண்டாட்டத்தில் சமந்தாவின் வயிறு பெரிதாக தெரிந்ததால் இது கூறப்பட்டுவருகிறது. ஆனால் இதை இன்னும் சமந்தா உறுதியாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us