AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Swasika: என்னோட ஆக்சிஜனே தமிழ் ரசிகர்கள்தான்.. நூறு சாமிக்கு கிடைத்த வரவேற்பிற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த ஸ்வாசிகா!

Swasikas Emotional Thanks: மலையாளம் சினிமாவின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, தமிழில் தற்போது தொடர்ந்து ஹிட் படங்களில் பணியாற்றிவருபவர் ஸ்வாசிகா. இவர் சமீபத்தில் நூறு சாமி என்ற படத்தில் லீட் நடிகையாக நடித்து அசத்தியிருந்தார். இப்படத்திற்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து ஸ்வாசிகா வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Swasika: என்னோட ஆக்சிஜனே தமிழ் ரசிகர்கள்தான்.. நூறு சாமிக்கு கிடைத்த வரவேற்பிற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த ஸ்வாசிகா!
தமிழ் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ஸ்வாஸிகாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Jun 2026 13:29 PM IST

தமிழில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான லப்பர் பந்து (Lubber Pandu)திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர ஸ்வாசிகா (Swasika). இவர் அதற்கு முன்பே பல தமிழ் படங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறார். அப்போதெல்லம் அவருக்கு கிடைக்காத வரவேற்பு, லப்பர் பந்து படத்தின் மூலம் கிடைத்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக சூர்யாவுடன் (Suriya) கிட்டத்தட்ட 2 படங்களில் நடித்துவிட்டார். ரெட்ரோ படத்தில் (Retro) சூர்யாவின் வளர்ப்பு தாயாகவும், கருப்பு படத்தில் (Karuppu) நெகடிவ் வேடத்திலும் நடித்திருந்தார். இதன் மூலம் இவருக்கு மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் தமிழில் இவர் லீட் நடிகையாக நடித்துள்ளார் படம்தான் நூறு சாமி (Nooru saami). இப்படமானது நிஜ வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழில் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருந்துவருகிறது.

இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த பலரும் கண்ணீர் மல்க மற்றும் பெண்களின் மறுமணம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்திருந்தனர். அதன் காரணமாக இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு திரையரங்குகளில் கிடைக்கிறது. இந்நிலையில் இந்த வரவேற்பிற்கு காரணமான தமிழ் ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க தனது நன்றியை தெரிவித்து, ஸ்வாசிகா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆணுக்கு பெண் வாழ்க்கை கொடுத்தால் தவறா? நூறு சாமி படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் – அப்படி என்ன இருக்கு!

நூறு சாமி படத்திற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகை ஸ்வாசிகா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Swaswika (@swasikavj)

இந்த பதிவில் ஸ்வாசிகா, ரசிகர்களுக்கு நன்றி சொல்லும்போது உண்மையிலேயே கண்ணீர் விட்டுள்ளார். சில சமயங்களில். ரசிகர்களின் அன்பினால் சிந்தும் ஆனந்தக் கண்ணீர்தான் ஒரு கலைஞர் பெறக்கூடிய மிகப்பெரிய பொக்கிஷம். அந்த வகையில் நூறு சாமி படத்திற்காக ஸ்வாசிகா மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார். தொடர்ந்து தனது சிறப்பான நடிப்பிற்காக, அவர் பாராட்டு மழையிலும் அன்பிலும் மூழ்கி வருகிறார்.

இதையும் படிங்க: மூன்று வேடத்தில் விஷால்.. முடிவடைந்தது மகுடம் திரைப்படத்தின் ஷூட்டிங்!

மேலும் இந்த வீடியோவில் அவர் தமிழ் ரசிகர்களின் அன்பு மற்றும் அவர்களை தனது ஆக்சிஜன் என புகழ்ந்து பேசியுள்ளார். நூறு சாமி படத்திற்காக தன்னை இப்படிப்பட்ட உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்ற தமிழ் ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சசிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

நூறு சாமி படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு :

இந்த நூறு சாமி படமானது முதல் நாளிலே உலகமெங்கும் கிட்டத்தட்ட 4500 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியிருந்தது. உண்மை சம்பவத்தய் மையமாக கொண்ட கடத்தி என்ற நிலையில், இதற்க்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மேலும் இது இயக்குநர் சசிக்கு 6 வருடத்திற்கு பின் கம்பேக் படமாக அமைந்துள்ளதுஹ் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us