AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vijay Antony: ஸ்வாசிகாவிற்கு இந்தியன் ஆஸ்கார் அவார்ட் கொடுக்கலாம்.. டப்பா எதுவும் இருக்கா! – கலகலப்பாக பேசிய விஜய் ஆண்டனி!

Vijay Antony About Swasika Performance: நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சசியின் கூட்டணியில் வெளியான புதிய படம்தான் நூறு சாமி. இதில் நடிகை ஸ்வாசிகா லீட் நாயகியாக நடித்திருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தார். இது குறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி, ஸ்வாசிகவிற்கு இந்தியன் ஆஸ்கர் அவார்ட் கொடுக்கலாம் என நகைச்சுவையாக பேசியுள்ளார்.

Vijay Antony: ஸ்வாசிகாவிற்கு இந்தியன் ஆஸ்கார் அவார்ட் கொடுக்கலாம்..  டப்பா எதுவும் இருக்கா! – கலகலப்பாக பேசிய விஜய் ஆண்டனி!
ஸ்வசிகாவின் நடிப்பு பற்றி விஜய் ஆண்டனிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 20 Jun 2026 11:40 AM IST

இசையமைப்பாளராக மக்களின் மனம் கவர்ந்து, பின் நடிகராகவும் மற்றும் தயாரிப்பாளார்கவும் பிரபலமானவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவரின் நடிப்பிலும், தயாரிப்பிலும் புதிதாக வெளியாகியுள்ள படம்தான் நூறு சாமி (Nooru saami). இதில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருந்தாலும், அவரைவிடவும் இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பவர் ஸ்வாசிகா (Swasika). இவர் தமிழில் லப்பர் பந்து படத்தின் மூலம் தனது வரவேற்பை பெற்றிருந்த நிலையிலொள், ரெட்ரோ (Retro) மற்றும் கருப்பு போன்ற படங்களிலும் இணைந்து நடித்திருக்கிறார். இந்நிலையில், இவருக்கு தமிழில் மிகப்பெரிய படமாக அமைந்துள்ளதுதான் நூறு சாமி. இதை இயக்குநர் சசி (Director Sasi) இயக்கியுள்ள நிலையில், ஒரு விதவை தாயின் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது.

இப்படம் 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியான நிலையில், மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. அண்மையில் செய்தியாளர்களை நூறு சாமி படக்குழு சந்தித்திருந்தது. அப்போது பேசிய விஜய் ஆண்டனி, “ஸ்வாசிகவிற்கு இந்தியன் ஆஸ்கார் அவார்ட் கொடுக்கணும்” என நகைச்சுவையாக பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: மோகன்தாஸ் படத்திற்கு என்னதான் ஆச்சு? நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்

ஸ்வாசிகா குறித்து விஜய் ஆண்டனி நகைச்சுவையாக பேசிய விஷயம்:

அந்த சந்திப்பில் பேசிய விஜய் ஆண்டனி, “ஸ்வாசிகாவிற்கு கண்டிப்பாக ஆஸ்கார் ஆவார் கொடுக்கணும்.. அனால் இந்தியாவில் ஆஸ்கார் அவார்ட் கிடையாது அல்லவா. அப்போ நம்ம கொடுத்திடலாமே, இந்தியாவில் ஒரு ஆஸ்கார் அவார்ட் தயாரித்து, நான் ஸ்வாசிகாவிற்கு கொடுத்து விடுகிறேன். எப்ப எதாவது தப்ப இருக்கா என கேட்டிருந்தார். பின் கலையான வாட்டர் பாட்டிலை ஸ்வாசிகவிடம் கொடுத்து, இதை தற்போதைக்கு இந்தியன் ஆஸ்கார் அவார்ட் என நினைத்துக்கொள்ளுங்கள் ” என அதில் காமெடியாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க: ஓம் படத்தின் கதையை சொல்ல மம்முட்டியை 7 மாதங்களாக பின்தொடர்ந்தேன் – ராஜ்குமார் பெரியசாமி

நூறு சாமி திரைப்படம் குறித்து விஜய் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் பதிவு:

நூறு சாமி திரைப்படத்தில் ஸ்வாசிகா செல்வி என்ற வேடத்தில் நடித்துள்ளார். கணவனை இழந்த பெண் ஒருவர் சமூதாயத்தில் படும் கஷ்டம் மற்றும் அவரின் குழந்தைகளை வளர்க்க அவர்படும் கஷ்டம் தொடர்பான கதைக்களத்தில் இது உருவாகியுள்ளது. இந்நிலையில், தற்போது மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு இயக்குநர்கள் மற்றும் பிரபலங்களும் இப்படத்தை பார்த்து பாராட்டிவருகின்றனர்.

Follow Us