AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓம் படத்தின் கதையை சொல்ல மம்முட்டியை 7 மாதங்களாக பின்தொடர்ந்தேன் – ராஜ்குமார் பெரியசாமி

Rajkumar Periyasamy talks about Mammootty | மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவர் அவ்வபோது தமிழ் சினிமாவில் நடித்து வரும் நிலையில் தற்போது தனுஷின் 55-வது படமான ஓம் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓம் படத்தின் கதையை சொல்ல மம்முட்டியை 7 மாதங்களாக பின்தொடர்ந்தேன் – ராஜ்குமார் பெரியசாமி
மம்முட்டி மற்றும் ராஜ்குமார் பெரியசாமிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Jun 2026 21:50 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. தமிழ் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ரங்கூன் என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார். அதன்படி இந்தப் படத்தின் மூலமாக அவர் அறிமுகம் ஆகி இருந்தாலும் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படம் அமரன். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனக நடித்து இருந்த நிலையில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது மூன்றாவது படத்திற்காக நடிகர் தனுஷ் உடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்திற்கு தற்போது ஓம் எனு பெயர் வைத்துள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டியை நடிக்க வைக்க என்ன எல்லாம் செய்தார் என்பது குறித்து ராஜ்குமார் பெரியசாமி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஓம் படத்திற்காக 7 மாசம் மம்முட்டியை பின்தொடர்ந்தேன்:

ஓம்படத்தின் கதையை விவரிப்பதற்காக மம்மூட்டி சாரை கடந்த 7 மாதங்களாகத் தொடர்ந்து அணுகி வந்ததாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்தார். ஒரு நாள் அவர் சென்னை வந்திருந்தபோது கதையைக் கூற அழைத்தேன். சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த பிறகு, சுமார் 2 மணி நேரம் கதையை விவரித்தேன். அதைக் கேட்டதும் அவர் உடனடியாக இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தில் சாய் பல்லவியின் கதாபாத்திரம் சிறந்த நடிப்புத் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக அமைந்திருந்ததால், ‘அமரன்’ படத்திற்குப் பிறகு அவரை ஒப்பந்தம் செய்தோம் என்றும் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Keerthy Suresh: தனுஷ் சாரை முதல் முறை பார்த்த தருணம் – சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!

இணையத்தில் வைரலாகும் ராஜ்குமார் பெரியசாமி பேச்சு:

Also Read… பிச்சைக்காரன் பட கூட்டணி நூறு சாமி படத்திலும் வெற்றிப் பெற்றதா? மக்களின் கருத்து இதோ

Follow Us