தளபதி விஜய் அதற்கு 100 சதவீதம் பொருத்தமான நபர் – நடிகை சமந்தா ரூத் பிரபு
Samantha Ruth Prabhu talks about CM Vijay | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்போது முதலமைச்சராக உள்ள தளபதி விஜயை நேரில் சந்தித்து பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் நடிகை சமந்தாவும் தனது வாழ்த்துகளை நேரில் தெரிவித்து உள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவரது நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிகப்படியான படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிகை சமந்தா ரூத் பிரபு நடித்து உள்ளார். இவரது நடிப்பில் வெளியான பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வந்த சமந்தா முதல் திருமணத்தின் விவாகரத்திற்கு பிறகு உடல் நலக் குறைவு காரணமாக சினிமாவிற்கு ப்ரேக் விட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து முழுவதுமாக உடல் நலத்தில் கவணம் செலுத்திவந்த அவர் பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்.
தற்போது நடிகையாக மட்டும் இல்லாமல் தயாரிபபாளராகவும் சினிமாவில் வலம் வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் தான் நடித்த இணையதள தொடரான ஃபேமிலி மேன் சீரிஸின் இயக்குநர் ராஜ் என்பவரை சமீபத்தில் இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து சினிமாவில் நடிப்பிலும் பிசியாக வரும் இவர் தமிழ் நாட்டின் முதலமைச்சராக உள்ள தளபதி விஜய் குறித்து பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




தளபதி விஜய் அதற்கு 100 சதவீதம் பொருத்தமான நபர்:
நேற்று தமிழ் நாட்டின் முதலமைச்சர் விஜயை சந்தித்த பிறகு பேட்டியில் நடிகை சமந்தா ரூத் பிரபு பேசியதாவது, பொதுவாக யாரையும் சந்திப்பதில் எனக்கு அவ்வளவாக உற்சாகம் இருந்தது இல்லை ஆனால், நடிகர் விஜய் அவர்களுடன் மூன்று படங்களில் பணியாற்றியுள்ளதால், அவரைச் சந்திப்பதில் எனக்கு மிகுந்த உற்சாகம் இருந்தது. அப்போதே அவருடைய இலக்குகள் மிகத் தெளிவாக இருந்தன. இது திடீரென உருவான ஒன்றல்ல, அதனால் இதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. முதலமைச்சர் பதவிக்கு அவர் மிகவும் பொருத்தமான நபர் என்று சமந்தா பேட்டியில் தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் சத்யவான் சாவித்ரி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
இணையத்தில் வைரலாகும் நடிகை சமந்தா ரூத் பிரபுவின் பேச்சு:
“I’m never excited to meet anyone, but this time I’m excited as I worked with @actorvijay sir for 3 Films🤩. Even back then his goals was very clear, it’s not something sudden & I’m not surprised. He is the perfect person for CM job💯”
– #Samantha pic.twitter.com/EvQ9pvnwBP— AmuthaBharathi (@CinemaWithAB) June 17, 2026
Also Read… டிக்கெட் முன்பதிவை தொடங்கியது விஜய் ஆண்டனியின் நூறு சாமி படக்குழு