AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாக்கெட் நாவல் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்த மாளவிகா மோகனன்!

Malavika Mohanan Instagram Post: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராகி இருந்துவருபவர் மாளவிகா மோகனன். இவரின் நடிப்பில் தமிழில் உருவாகிவரும் புதிய திரைப்படம்தான் பாக்கெட் நாவல். இதன் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், சென்னையின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.

பாக்கெட் நாவல் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்த மாளவிகா மோகனன்!
மாளவிகா மோகனன்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 16 Jun 2026 16:56 PM IST

நடிகை மாளவிகா மோகனன் (Malavika Mohanan) மலையாள சினிமாவின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் தொடர்ந்து மலையாளத்தில் படங்களில் நடித்துவந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜின் பேட்ட (Petta) என்ற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். இதில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக அறிமுகமான நிலையில், வரவேற்பு இவருக்கு இருந்தது. ஆனால் இதற்கும் மேல் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை கொடுத்த திரைப்படம்தான் மாஸ்டர் (Master). இதில் தளபதி விஜய்க்கு (Thalapathi Vijay) ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து தனுஷ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுடன் படங்களில் நடித்திருந்தார். இந்த வரிசையில் தெலுங்கிலும் பிரபாஸின் தி ராஜா சாப் (The Raja Saab) படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் (Thiagarajan Kumararaja) இயக்கத்தில் பாக்கெட் நாவல் (Pocket Novel) என்ற படத்தில் நடிக்கிறார்.

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் இயக்குநருடன் புகைப்படம் ஒன்றை மாளவிகா மோகனன் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது படப்பிடிப்புதளத்தில் எடுக்கப்பட்ட போட்டோஸ் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: தப்பா புரிஞ்சிக்கிட்டு தற்குறினு திட்டுறாங்க.. நான் என் கருத்தில் இறுதியாக இருக்கிறேன் – மாஸ்டர் மகேந்திரன் பதில்!

பாக்கெட் நாவல் படத்தின் ஷூட்டிங்ஸ்க் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன்:

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

நடிகை மாளவிகா மோகனன், பாக்கெட் நாவல் படத்தின் சென்னை படப்பிடிப்பு அனுபவம், அங்கு அவர் சாப்பிட்ட கடைகள் மற்றும் அவர் சென்ற கோவில் குறித்து இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாக்கெட் நாவல் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: தனுஷ் 55 படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்

பாக்கெட் நாவல் படத்தை தொடர்ந்து மாளவிகா மோகனன் தமிழில் கார்த்தியின் சர்தார் 2 படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இதில் மாளவிகா மோகனன் அதிரடி ஆக்ஷன் மற்றும் சண்டை காட்சிகளில் நடித்துள்ளாராம். இது குறித்து அவரே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். இப்படமானது 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் முடியவில்ல நிலையில், அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us