தனுஷ் 55 படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்
Dhanush 55 Movie Shooting Update | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படத்திற்கு தற்காலிகமாக தனுஷ் 55 என்று அழைக்கப்படுகின்றது. இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் சினிமாவில் கடந்த ஏப்ரல் மாதம் கர என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கிய அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றது மட்டும் இன்றி ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் அவரது 55-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
இந்தப் படத்தினை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி வருகிறார். முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான அமரன் படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் படம் தொடர்பான முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வருகின்ற 18-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு வெளியிட உள்ளது. இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் எந்த நிலையில் உள்ளது என்பதை பார்க்கலாம்.




தனுஷ் 55 படத்தின் தற்போதைய நிலை என்ன?
தனுஷ் 55 திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், மிக அண்மையில் புழலிலும் நடைபெற்றது. அடுத்தகட்டப் படப்பிடிப்பிற்காகப் படக்குழு துபாய் செல்லக்கூடும். படப்பிடிப்புத் தளங்களைப் பார்வையிடுதல், படப்பிடிப்புக்கான அனுமதிகளைப் பெறுதல் மற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான தங்குமிட ஏற்பாடுகளைச் செய்தல் போன்ற பணிகளுக்காக ஒரு குழு தற்போது அங்கு சென்று கொண்டிருக்கிறது. அங்கு பிரம்மாண்டமான காட்சிகளைப் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… டாடா பட இயக்குநரின் எழுத்தில் உருவான டார்க் படம் – ட்ரெய்லர் இதோ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
BUZZ – #D55 shooting recently took place in Chennai local areas, and most recently in Puzhal. The team may head to Dubai for their next schedule. A team is currently going there to do location scouting, arranging shooting permissions, and also organizing accommodation for the… pic.twitter.com/oYKxL7NxL8
— Movies Singapore (@MoviesSingapore) June 15, 2026
Also Read… தீவிர உடற்பயிற்சியில் நடிகர் சூர்யா – இணையத்தில் வைரலாகும் வீடியோ