AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டுவிட்-க்கு 2000 ரூபா.. ரீல்ஸ்-க்கு 4000 ரூபா.. ராக்ஸ்டார் அனிருத்தின் ‘அரவிந்த்’ என்ற இண்டீ பாடல் வெளியீடு!

Aravindh Indie Song: பான் இந்திய பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர். இவர் இசையமைப்பாளராக பல படங்களில் பணியாற்றிவரும் நிலையில், தற்போது புதிதாக இண்டீ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அரவிந்த் என்ற பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

டுவிட்-க்கு 2000 ரூபா.. ரீல்ஸ்-க்கு 4000 ரூபா.. ராக்ஸ்டார் அனிருத்தின் ‘அரவிந்த்’ என்ற இண்டீ பாடல் வெளியீடு!
அனிருத் அரவிந்த் இண்டீ பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 14 Jun 2026 18:02 PM IST

கோலிவுட் சினிமாவில் மிகவும் பேமஸான இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்துவருபவர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவரை ரசிகர்கள் அன்போடு ராக்ஸ்டார் (Rockstar)என்றும் அழைத்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், தற்போது இந்த மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் உருவாகிவரும் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். இந்தியில் ஷாருக்கானின் ஜவான் (Jawan) என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக நுழைந்த நிலையில், தற்போது அவர் புதிதாக நடித்துவரும் கிங் என்ற படத்திற்கும் அனிருத்தான் இசையமைத்துவருகிறாராம். இவ்வாறு பான் இந்திய பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக அனிருத் இருந்துவருகிறார். இவர் சினிமாவில் பாடல்களுக்கு இசையமைத்திருந்தாலும், தனது இசையமைப்பில் ஆல்பம் (இண்டீ) பாடல்களை வெளியிட்டுவந்தார்.

எனக்கென யாரும் இல்லையே, அவளுக்கென போன்ற பல இண்டீ பாடல்களை இவர் வெளியிட்டிருக்கிறார். அந்த வகையில் 2026ம் ஆண்டில் இவர் வெளியிட்டுள்ள புது இண்டீ பாடல்தான் “அரவிந்த்” (Aravindh). இப்பாடலில் தளபதி விஜய் பாடிய “பாட்டுளுக்கு பத்துரூபா” என்ற ராகத்தில், “டுவீட்-க்கு 2000 ரூபா, ரீல்ஸ்-க்கு 4000 ரூபா” என்ற வரிகளில் இப்பாடல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: விஜய் டிவியில் வரப்போகும் ஒண்ணா இருக்க கத்துக்கணும் சீரியல்.. வெளியான புரோமோ இதோ!

அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்ட அரவிந்த் என்ற இண்டீ பாடல் குறித்த எக்ஸ் பதிவு:

அனிருத்தின் இந்த “அரவிந்த்” பாடலை அனிருத் பாடியுள்ள நிலையில், இப்பாடலின் வரிகளை பாடலாசிரியர் சூப்பர் சுப்பு என்பவர் எழுதியுள்ளார். இவர்தான் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் “சலம்பல” என்ற பாடலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்ததாக இவர் அரவிந்த் என்ற பாடலை எழுத, அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். மேலும் இந்த பாடலும் அனிருத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கரண்ட் போகுதா..? சோலார் வாங்கி மாட்டிக்கோங்க! – மாஸ்டர் மகேந்திரன் பேச்சு!

அனிருத்தின் இசையமைப்பில் உருவாகிவரும் படங்கள் :

தமிழில் அனிருத்தின் இசையமைப்பில் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படம் உருவாகியிருக்கும் நிலையில், இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதையடுத்து இவர் தமிழில் சிலம்பரசனின் அரசன் திரைப்படம், லோகேஷ் கனகராஜின் டிசி, கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் KHxRK திரைப்படம் மற்றும் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் இவர் இந்தியில் ஷாருக்கானின் கிங் படத்திலும், தெலுங்கில் அல்லு அர்ஜுனின் AA23 மற்றும் நானியின் தி பாரடைஸ் போன்ற படங்களுக்கும் இசையமைக்கும் பணிகளில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படங்களின் மூலமாக அனிருத்துக்கு பான் இந்திய பிரபலம் கிடைத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us