Sreeleela: ஸ்ரீலீலாவின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷின் D55 படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்!
Sreeleelas 25th Birthday: சினிமாவில் டான்சிங் குயின் என அழைக்கப்பட்டுவருபவர் ஸ்ரீலீலா. இவர் தற்போது தனுஷின் D55 படத்தில் கதாநாயகியாக நடித்துவரும் நிலையில், சிறப்பாக உருவாகிவருகிறது. இன்று 2026ம் ஆண்டு ஜூன் 14ம் தேதியில் தனது பிறந்தநாளை ஸ்ரீலீலா சிறப்பாக கொண்டாடிவரும் நிலையில், D55 படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீலீலா (Sreeleela). இவர் தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா முதல் மகேஷ் பாபு (Mahesh babu) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பிரபலங்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். இவர் இளம் கதாநாயகியாக நடித்து அசத்திவரும் நிலையில், தனது சிறு வயதிலே குழந்தைகளை தந்தெடுத்து வளர்த்துவருகிறார். இவ்வாறு மக்கள் மத்தியில் இவருக்கு மிகுந்த மரியாதையம் உண்டு. இவர் தெலுங்கு சினிமாவில் தனது நடனத்தின் மூலம் மிகவும் பிரபலமான நிலையில், தமிழில் இவர் அறிமுகமான முதல் படம்தான் பராசக்தி (Parasakthi). இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Konraga) இயக்கத்தில் வெளியான இப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக நடித்து அறிமுகமானார்.
இதையடுத்து இவர் ஒப்பந்தமான தமிழ் படம்தான் D55. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy) இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில், தனுஷிற்கு (Dhanush) ஜோடியாக இவர் நடித்துவருகிறார். இந்நிலையில், இன்று (14/06/2026) ஸ்ரீ லீலா தனது 25வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், ஸ்பெஷல் போஸ்டரை தனுஷின் D55 படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: அஜித் சாருடன் பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது.. ஆனால் – கார்த்திக் சுப்புராஜ்!
ஸ்ரீலீலாவின் பிறந்தநாளில் தனுஷின் D55 படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர் குறித்த பதிவு:
Hearty birthday wishes to the sensational @sreeleela14, from team #D55 ✨
And yes, we heard you all 😉
Updates 🔜 🔥 pic.twitter.com/7SGFE2gIRx
— Wunderbar Films (@wunderbarfilms) June 14, 2026
நடிகை ஸ்ரீலீலா தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமானவர். பாசக்தி படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக நுழைந்த நிலையில், இப்படத்தில் தனது நடிப்பின் மூலம் பிரபலமானார். இதையடுத்து தொடர்ட்ந்து தெலுங்கு மற்றும் இந்தி போன்ற படங்களில் ஒப்பந்தமாகிவந்த நிலையில், தமிழில் தனுஷின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகிவரும் D55 படத்தில் நடிகையாக நடித்துவருகிறார். இதில் இவர் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடித்துவருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, தனுஷின் ஒண்டர்பார் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.
இதையும் படிங்க: திருமணத்தின் விழாவில் சொன்ன சபதத்தை நிறைவேற்றிய விஜய் தேவரகொண்டா.. அவரே வெளியிட்ட விஷயம் இதை பாருங்க!
இதில் நடிகர்கள் மம்முட்டி மற்றும் சாய் பல்லவி போன்ற நடிகர்களும் இணைந்து நடிக்கின்றனர். இதில் சாய் பல்லவி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக வட்டாரங்கள் கூறுகிறது. இப்படம் சிறப்பான கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், 2026ம் ஆண்டு இறுதியில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுவருகிறதாம். மேலும் விரைவில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.