Karthik Subbaraj: அஜித் சாருடன் பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது.. ஆனால் – கார்த்திக் சுப்புராஜ்!
Karthik Subbaraj About Ajith: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் ரஜினிகாந்த் முதல் சூர்யா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், அஜித்துடன் பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் (Karthik Subbaraj) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட படமானது வெளியாகியிருக்கிறது. இவர் பீட்சா (Pizza) என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக நுழைந்த நிலையில், ஜிகர்தண்டா என்ற படத்தை இயக்கி பிரபலமானார். இப்படத்தை அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் சூர்யா (Suriya) போன்ற பிரம்மாண்ட நடிகர்களின் படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். இவரின் இயக்கத்தில் இறுதியாக ரெட்ரோ (Retro) என்ற படமானது வெளியாகியிருந்தது. கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகியிருந்த இப்படம் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூலில் சாதனை படைத்திருந்தது.
இவர் இப்படத்தை அடுத்ததாக புதிதாக படம் ஒன்றை இயக்கிவரும் நிலையில், அதற்கு இசையமைப்பாளர் இளையராஜாதான் (Ilaiyaraaja) இசையமைத்துவருகிறார். இதன் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், அஜித் குமாருடன் (Ajith Kumar) பணியாற்ற விரும்புவது பற்றி மற்றும் அவருடன் பணியாற்ற வாய்ப்பு இருந்தது பற்றியும் பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ஏசியன் லெ மான்ஸ் கார் ரேஸ்.. 13வது இடத்தை பிடித்தது அஜித் குமாரின் அணி!
அஜித் குமாருடன் பணியாற்றும் வாய்ப்பு பற்றி பகிர்ந்த கார்த்திக் சுப்புராஜ்:
அந்த பேட்டியில் பேசிய அவர், “அஜித் சாருடன் பணியாற்ற வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். அதற்காக நானும் முயற்சி செய்தேன். நான் அவரிடம் ஒரு கதையை கூறுவது பற்றிய பேச்சுவார்த்தைகளும் நடந்தது. ஆனால் இன்னும் அவரிடம் கதையை நான் கூறவில்லை. நான் அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். அது கண்டிப்பாக நடக்கவேண்டும் என நான் விரும்புகிறேன்” என அதில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார். தற்போது இது குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: எல்லாம் இனிதே.. சேயோன் பட ஷூட்டிங் புகைப்படத்தை பகிர்ந்த சிவகார்த்திகேயன்!
அஜித்துடன் பணியாற்றவேண்டும் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியது தொடர்பாக வைரலாகும் பதிவு:
Q: You haven’t worked with #Ajithkumar sir yet.. Is there a chance for it to happen..❓#KarthikSubbaraj : I think there’s a chance for that..🔥 I tried for it.. And there were talks about narrating a story to him.. But it’s not happening yet.. I’m looking forward to it.. I also… pic.twitter.com/xReIh951KG
— Laxmi Kanth (@iammoviebuff007) June 14, 2026
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது குழந்தைகளை வைத்து ஒரு வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படத்தை இயக்கியிருக்கிறாராம். இதை அவரே இயக்கி அவரே தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துவரும் நிலையில், விரைவில் இப்படத்தின் பாடல்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படமானது இந்த 2026ம் ஆண்டிற்குள் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.