AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நூறு சாமி படத்திற்காக சசி கொடுத்த அர்ப்பணிப்பை நான் மிகவும் மதிக்கிறேன் – இயக்குநர் வெற்றிமாறன்!

Director Vetrimaaran About Nooru Saami: பிரபலமிக்க இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் சசி. இவரின் இயக்கத்தில் நூறு சாமி படமானது வெளியாக தயாராகியுள்ள நிலையில், சமீபத்தில் இதன் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு கலந்துகொண்ட நிலையில், அதில் சசி குறித்து பெருமையாகப் பேசியுள்ளார்.

நூறு சாமி படத்திற்காக சசி கொடுத்த அர்ப்பணிப்பை நான் மிகவும் மதிக்கிறேன் – இயக்குநர் வெற்றிமாறன்!
நூறு சாமி படம் பற்றி வெற்றிமாறன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Jun 2026 15:04 PM IST

தமிழ் மக்கள் மத்தியில் தனது இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் சசி (Director Sasi). இவரின் இயக்கத்தில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள திரைப்படம்தான் நூறு சாமி (Nooru Saami). இப்படத்தை இயக்குநர் சசி இயக்க, நடிகர்கள் விஜய் ஆண்டனி (Vijay Antony) மற்றும் ஸ்வாசிகா (Swasika) இருவருமே மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படமானது அம்மா மற்றும் அவரின் பிள்ளைகளை பற்றிய ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தின் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் விஜய் ஆண்டனி, இப்படத்தை தயாரித்தும் உள்ளார். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படமாக உருவாகியுள்ள நிலையில், எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றிருந்த நிலையில், அதில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டனர். மேலும் இயக்குநர் வெற்றிமாறனும் இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நிலையில் இயக்குநர் சசி மற்றும் நூறு சாமி படம் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: காஞ்சனா 4 படத்தில் நடிக்க பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை? வைரலாகும் தகவல்

நூறு சாமி திரைப்படம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் பகிர்ந்த விஷயம்:

அந்த நிகழ்ச்சியின்போது பேசிய இயக்குநர் வெற்றிமாறன், அதில் “இயக்குநர் சசி சார் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் இருக்கிறார். அவர் இயக்கியிருக்கும் நூறு சாமி படமானது பழைய படம் போல இல்லை. இப்படம் ஒரு புதிய சிந்தனையுடன் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒவ்வொரு நடிகர்களின் நடிப்பும் மிகவும் கச்சிதமாக இருந்தது.

இதையும் படிங்க: தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்தது பெத்தி படம்

அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. சசி சாருக்கு அவரின் எல்லா படத்தின் டைட்டிலும், படத்திற்கு ஏற்றதுபோலவே அமையும். அவர் திரைப்படத்தை உருவாக்குவதில் காட்டும் அர்பணிப்பணிப்பிற்காக, நான் அவரை எப்போதும் மதித்துவருகிறேன். இப்படத்தில் இசையும் மற்றும் ஒளிப்பதிவும் நன்றாக இருந்தது. இப்படம் திரையரங்குகளில் வெற்றிபெறுவதற்காக வாழ்த்துகிறேன்” என அதில் அவர் கூறியிருந்தார்.

இயக்குநர் சசியின் நூறு சாமி படம் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் பேசியது தொடர்பான பதிவு:

நூறு சாமி படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இந்த 2026ம் ஆண்டில் விஜய் ஆண்டனிக்கு ஒரு வெற்றிப்படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us