AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Nooru Saami: விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்.. சென்சார் சான்றிதழ் அப்டேட் இதோ!

Nooru Saami censor certificate Update: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்புப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம்தான் நூறு சாமி. இப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம், சென்சார் கொடுத்த சான்றிதழ் பற்றி விவரமாக காணலாம்.

Nooru Saami: விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்.. சென்சார் சான்றிதழ் அப்டேட் இதோ!
நூறு சாமி திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 04 Jun 2026 16:54 PM IST

இயக்குநர் சசியின் (Director Sasi) இயக்கத்தில் விஜய் ஆண்டனி (Vijay Antony), ஸ்வாசிகா (Swasika), லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம்தான் நூறு சாமி (Nooru saami). இந்த படமானது முழுக்க கிராமத்து கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், இதில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ளார். இவரைவிடவும் இப்படத்தில் மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பவர் நடிகை ஸ்வாசிகா. இவர் தற்போது சினிமாவில் வித்தியாசமான வேடங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கியுள்ள நிலையில், இப்படமானது சிறப்பான கதைக்களத்தில் அமைந்துள்ளது. இது ஒரு சாதாரண குடும்பத்தை பற்றிய ஒரு கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சிங்கிள் தாயாக தனது குழந்தைகளை வளர்ப்பதற்கு கஷ்டப்படும் அம்மாவை மையமாக கொண்டு இப்படம் அமைந்துள்ளதாம்.

இந்த படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர், அதன்படி 2026 ஜூன் 19ம் தேதியில் இப்படமானது உலகமெங்கும் வெளியாகவுள்ளதாம். தற்போது இடத்திற்கு என்ன சென்சார் கிடைத்துள்ளது என்பது குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: அங்கீகாரம் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு!

நூறு சாமி படத்தை யாரெல்லாம் பார்க்கலாம் சென்சார் விவரம் :

விஜய் ஆண்டனி மற்றும் ஸ்வாசிகாவின் நூறு சாமி படத்திற்கு சென்சார் குழு யு/ஏ +13 என்ற சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தை 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் திரையரங்குகளில் சென்று பார்க்கலாம். தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகபரவிவருகிறது.

நூறு சாமி படத்தின் சென்சார் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களை இயக்கியிருந்த சசியின் இயக்கத்தில் நூறு சாமி என்ற படமானது தயாராகியுள்ளது. இப்படமானது பிச்சைக்காரன் படத்தை போலவே அம்மாவை மையமாக கொண்ட படமாக இது உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: கே.வி.ஆனந்த் இறப்பதற்கு முன் அந்த நடிகரை வைத்து படம் இயக்க நினைத்தார் – போஸ் வெங்கட் ஓபன் டாக்

இதில் ஸ்வாசிகா லீட் நாயகியாக நடித்துள்ள நிலையில், அவருடன் லிஜோமோல் ஜோஸ், அஜய் திஷன், கருணாஸ் மற்றும் காவ்யா அனில் உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் சிறப்பாக இப்படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது. இப்படம் 2026 ஜூன் 19ம் தேதியில் வெளியாக தயாராகியுள்ள நிலையில், படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Follow Us