AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கே.வி.ஆனந்த் இறப்பதற்கு முன் அந்த நடிகரை வைத்து படம் இயக்க நினைத்தார் – போஸ் வெங்கட் ஓபன் டாக்

Bose Venkat Recent Interview | சின்னத்திரையில் நடிகராக அறிமுகம் ஆகி பிறகு வெள்ளித்திரைக்கு வந்து நடிகராகவும் இயக்குநராகவும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தவர் போஸ் வெங்கட். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கே.வி.ஆனந்த் இறப்பதற்கு முன் அந்த நடிகரை வைத்து படம் இயக்க நினைத்தார் – போஸ் வெங்கட் ஓபன் டாக்
போஸ் வெங்கட்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Jun 2026 15:36 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் போஸ் வெங்கட். இவர் சின்னத்திரையில் இயக்குநர் திருமுருகன் எழுதி இயக்கி நடித்த மெட்டி ஒலி என்ற சீரியலின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். அந்த மெட்டி ஒலி தொடரில் போஸ் என்ற கதாப்பாத்திரத்தில் அவர் நடித்ததன் காரணமாகவே அவர் போஸ் வெங்கட் என்று அழைக்கப்படுகிறார். தொடர்ந்து சின்னத்திரையில் நடித்ததன் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவராக இருந்த இவர் தற்போது தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழ் சினிமாவில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் நடிகராக நடிக்கத் தொடங்கி தொடர்ந்து நடித்து வருகிறார்.

நடிகராக போஸ் வெங்கட் பலப் படங்களில் நடித்து உள்ளது போல தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் படத்தை இயக்கி உள்ளார். அதன்படி இவரது இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கன்னி மாடம் என்ற படம் வெளியானது. இதுதான் போஸ் வெங்கட் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் ஆகும். அதனைத் தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்டு சார் என்ற படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் இவரது இயக்கத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலம்பரசன் வைத்து படம் இயக்க நினைத்த கே.வி.ஆனந்த்:

தமிழ் சினிமாவில் போஸ் வெங்கட் பலப் படங்களில் நடித்து இருந்தாலும் இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான படங்கள் இவரை மக்களிடையே அதிக அளவில் பிரபலமாக்கியது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய போஸ் வெங்கட் கே.வி.ஆனந்த் இறப்பதற்கு முன்னதாக நடிகர் சிலம்பரசன் வைத்து படம் இயக்க நினைத்ததாதகவும் அதனை தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

அந்தப் பேட்டியில் போஸ் வெங்கட் பேசியதாவது, இயக்குநர் கே.வி. ஆனந்த் காலமாவதற்கு முன்பு, என்னிடம் ஒன்று கூறினார். “நான் தற்போது சிலம்பரசன் TR-ஐ நாயகனாகக் கொண்டு ஒரு கதையை எழுதி வருகிறேன். அந்தப் படத்தில், நீங்கள் ஒரு நகைச்சுவை வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பீர்கள்,” என்று அவர் அப்போது என்னிடம் கூறினார் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… ஜெயிலர் 2 படத்தை வெளியிடுவதில் குழப்பத்தில் உள்ள படக்குழு – என்ன பிரச்சனை தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் போஸ் வெங்கட் பேச்சு:

Also Read… விஸ்வநாத் & சன்ஸ் படம் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார்

Follow Us