AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜெயிலர் 2 படத்தை வெளியிடுவதில் குழப்பத்தில் உள்ள படக்குழு – என்ன பிரச்சனை தெரியுமா?

Rajinikanths Jailer 2 Movie Update | தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி உலகம் முழுவதும் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் தற்போது ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் வெளியீட்டில் படக்குழுவினர் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஜெயிலர் 2 படத்தை வெளியிடுவதில் குழப்பத்தில் உள்ள படக்குழு – என்ன பிரச்சனை தெரியுமா?
ஜெயிலர் 2
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Jun 2026 19:21 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் பான் இந்திய அளவில் அடுத்தடுத்து பலப் படங்களில் நடித்து உள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் நடிகராக நடிக்கத் தொடங்கி 50 ஆண்டுகளை கடந்து தற்போதும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் 75 வயதைக் கடந்தும் தொடர்ந்து இளம் நடிகர்களுக்கு போட்டியாக நடித்து வருவது ரசிகர்களிக்கு மகிழ்ச்சி அளித்து வருகிறார். இந்த நிலையில் இத்தனை வயது ஆனாலும் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வருடத்திற்கு ஒரு படமாவது திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் கடந்த 2025-ம் ஆண்டு கூலி படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாவதற்காக காத்திருக்கும் படம் ஜெயிலர் 2. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

ஜெயிலர் 2 படத்தை வெளியிடுவதில் குழப்பத்தில் உள்ள படக்குழு:

இந்த நிலையில் சினிமா வாட்டாரங்களில் வெளியான தகவலின்படி ஜெயிலர் 2 படக்குழுவினர், அப்படத்தை செப்டம்பர் 3-ஆம் தேதி வெளியிடுவதா அல்லது 2026 தீபாவளியன்று ஒரு பிரம்மாண்டமான பண்டிகை வெளியீடாகக் கொண்டுவருவதா என்பது குறித்துக் குழப்பத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது விடுமுறைக்காக ஊட்டியில் தங்கியுள்ளார். மேலும், அவர் தனது சுயசரிதையைத் தயார்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்; இச்சுயசரிதை மிகவும் உண்மையானதாகவும், சர்ச்சைக்குரியதாகவும் அமையும் என்று சொல்லப்படுகிறது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… RJ Balaji: கருப்பனின் தொடக்கம்.. முதல்வர் விஜயை நேரில் சந்தித்த இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிரமாண்டமாக உருவாகும் சேயோன் படத்தின் பாடல்… வைரலாகும் தகவல்

Follow Us