AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Nayanthara: அறம் 2 படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி… ஆனால் – தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ராஜேஷ்!

Aramm 2 Movie: நடிகை நயன்தாராவின் நடிப்பில் 2017ம் ஆண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம்தான் அறம். இப்படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை கொடுத்து, சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகரும், தயாரிப்பாளருமான கே.ஜே.ஆர்.ராஜேஷ், அறம் 2 படம் பற்றி அப்டேட் கொடுத்துள்ளார்.

Nayanthara: அறம் 2 படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி… ஆனால் – தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ராஜேஷ்!
அறம் 2 திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 02 Jun 2026 15:47 PM IST

தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 20வது ஆண்டுகளுக்கும் மேலாக படங்களில் கதாநாயகியாகவே நடித்துவருபவர் நயன்தாரா (Nayanthara). இவர் தமிழ் சினிமாவை கடந்து, தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்து அசத்திவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் 2017ம் ஆண்டில் வெளியாகி சுமார் ஹிட் வரவேற்பைப் பெற்றிருந்த திரைப்படம்தான் அறம் (Aramm). இந்த படத்தை இயக்குநர் என்.கோபி நைனார் (N. Gopi Nainar) இயக்க, நயன்தாரா லீட் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்திருந்தார். ஆழ்துளை கிணற்றை விழுந்த குழந்தையை மீட்கும் ஒரு கதையை மையமாக கொண்ட படமாக இப்படம் வெளியாகியிருந்தது.

இதை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் (KJR Studios) என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்தாக அறம் 2 (Aramm 2) படம் தயாராகவிருந்ததாக கூறப்பட்டிருந்தது. அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளரும், தற்போது நடிகராக அறிமுகமாகியுள்ளார் கே.ஜே.ஆர்.ராஜேஷ், அறம் 2 படம் உருவாகுவது பற்றி பேசியுள்ளார்.

இதையும் படிங்க: இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள்… வாழ்த்து மழை பொழியும் பிரபலங்களும் ரசிகர்களும்!

நயன்தாராவின் அறம் 2 திரைப்படம் உருவாகுவது குறித்து தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். ராஜேஷ் சொன்ன விஷயம்:

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். ராஜேஷ் அதில், “ஐரா படத்திற்கு பிறகு, நயன்தாராவுடன் அறம் 2 படத்தை எடுக்க நினைத்தோம். அறம் 2 படத்திற்காக ஸ்கிரிப்ட் இயக்குநர் கோபி நைனார் ரெடி பண்ணுறேன்னு சொல்லிட்டு போனாரு, அதற்கு பின் அவர் உடனே வேறு ஒரு படத்தில் ஒப்பந்தமாகிவிட்டார். அந்த படத்தை முடித்துவிட்டு வருகிறேன் என சொன்னாரு.

இதையும் படிங்க: கொரிய சுற்றுலாவின் கௌரவத் தூதராக நியமிக்கப்பட்ட பிரியங்கா மோகன்! குவியும் வாழ்த்து!!

அப்போது நயன்தாரா கொடுத்த கால்ஷீட் வைத்தே ஐரா படம் பண்ணோம். இயக்குநர் கோபி நைனாரும் தொடர்ந்து வேறுவேறு படங்களில் பணியாற்றியிருந்தார். இன்னும் அறம் 2 படம் எடுப்பதற்கான ஐடியா இருக்கிறது. என்ன நடக்கிறது என பார்க்கலாம். அறம் 2 படத்திற்கான ஸ்கிரிப்ட் எல்லாமே ரெடிதான். இயக்குநர் கோபி நைனார் மட்டும் வரவேண்டும்” என அந்த நேர்காணலில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

அறம் 2 திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ராஜேஷ் பேசிய வீடியோ பதிவு:

தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். ராஜேஷ் தற்போது சினிமாவில் நடிகராகவும் நுழைந்துள்ளார். இவரின் நடிப்பில் முதலில் தயாராகியுள்ள படம் அங்கீகாரம். இப்படத்தில் விளையாட்டு வீரனாக நடித்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாக தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us