லெஜெண்ட் சரவணனின் ஆக்ஷன் சூப்பரா? சுமாரா?… ஓடிடியில் வெளியாகி உள்ள லீடர் படத்தின் விமர்சனம் இதோ
Leader Movie OTT Update | தமிழ் சினிமாவில் நடிகர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் லீடர். இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் அது எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
தமிழ் நாட்டில் பிரபல தொழிலதிபராக உள்ளவர் லெஜெண்ட் சரவணன். இவர் தனது 50 வயதிற்கு பிறகு நாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தமிழ் சினிமாவில் தற்போது நாயகனாக அறிமுகம் ஆகி நடித்து வருகிறார். அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு லெஜெண்ட் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நாயகனாக நடித்து உள்ள படம் லீடர். இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில் குமார் எழுதி இயக்கி உள்ளார். மேலும் ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் லெஜெண்ட் சரவணன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
அதன்படி இந்தப் படத்தில் நடிகர்கள் ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், பிரபாகர், அமிர்தா ஐயர், VTV கணேஷ், இயல், ஐஸ்வர்யா பாஸ்கரன், ஜார்ஜ் மரியன், அறந்தாங்கி நிஷா, ஆதித்ய கதிர், ஜெயஸ்மிர்தா, பாத்மென், சம்ரிதா சாம், யோகி ராம், ஓ.ஏ.கே.சுந்தர், மகாநதி சங்கர், மீசை ராஜேந்திரன், வேல் அருணாசலம், நிரஞ்சன் மோசஸ், ஷோபன் பாபு, அசோக் பாண்டியன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.
லெஜெண்ட் சரவணனின் லீடர் படம் எப்படி இருக்கு?
தூத்துக்குடியில் மனைவியை இழந்து தனது மகளுடன் வாழும் கார் மெக்கானிக்காக லெஜெண்ட் சரவணன் உள்ளார். அம்மா இல்லாத தனது மகளை எந்த குறையும் இல்லாமல் வளர்க்கும் தந்தையாக வளர்ந்து வருகிறார். இவர் மெக்கானிக்கா வேலை செய்யும் இடத்தில் அந்த ஏரியாவில் உள்ள சால்ட் என்ற பெரிய ரௌடியின் கார்கள் அதிக அளவில் சர்வீஸ் செய்ய வருகிறது. இதனால் சால்ட் இடத்திற்கு அடிக்கடி சென்று வருகிறார் லெஜெண்ட்.




இப்படி இருக்கும் நிலையில் சால்ட் செய்யும் தவறுகளை கையும் களவுமாக பிடிக்க அந்த ஏரியாவில் இருக்கும் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா முயற்சித்து வரும் நிலையில் லெஜெண்டிடம் ஒரு உதவி கேட்கிறார். ஆனால் லெஜெண்ட் அதனை மறுத்துவிட அந்த செய்தி சால்ட் காதிற்கு சென்று அவர் லெஜெண்ட் மீது சந்தேகப்படுகிறார். இப்படி இருக்கும் சூழலில் சால்ட் தனது மகளை கடத்தியதாக தகவல் கிடைக்க லெஜெண்ட் என்ன செய்கிறார்? அவரது ப்ளாஸ்பேக் என்ன என்பது குறித்து எல்லாம் படம் விரிகிறது. இந்தப் படத்தில் லெஜெண்ட் சரவணன் தனது சிறப்பான ஆக்ஷன் காட்சிகளை வெளிப்படுத்தியுள்ளார். படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… Ajith Kumar: தாயின் இறுதிச்சடங்கு.. பாதுகாப்பு கொடுத்த போலீசாருக்கு நன்றி சொன்ன அஜித்!