AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ajith Kumar: தாயின் இறுதிச்சடங்கு.. பாதுகாப்பு கொடுத்த போலீசாருக்கு நன்றி சொன்ன அஜித்!

Ajith Thanks To Police: அஜித் குமாரின் தாய் மோகினி மணி (89) வயது மூப்பு காரணமாக, நேற்று 2026 மே 30ம் தேதியில் காலமானார். இந்நிலையில் இன்று 2026 மே 31ம் தேதியில், மோகினி மணியின் இறுதிஊர்வலம் நடந்த நிலையில், அதற்கு பாதுகாப்பளித்த போலீசாருக்கு அஜித் நன்றி சொன்னது தொடர்பான வீடியோ வைரலாகிவருகிறது.

Ajith Kumar: தாயின் இறுதிச்சடங்கு.. பாதுகாப்பு கொடுத்த போலீசாருக்கு நன்றி சொன்ன அஜித்!
காவல்துறைக்கு நன்றி சொன்ன அஜித் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 31 May 2026 11:37 AM IST

தென்னிந்திய ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் கார் ரேஸராகவும் நடிகராகவும் அறியப்படுபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் தொடர்ந்து கார் ரேஸ் மற்றும் சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார். அந்த வகையில், நேற்று 2026 மே 30ம் தேதியில் அஜித் குமாரின் தாய் மோகினி மணி (Mohini Mani) (89 வயது) வயது மூப்பு காரணமாக காலமானார். இந்த தகவலறிந்த அஜித் குமார், துபாய் கார் ரேஸ் பயிற்சியிலிருந்து உடனே சென்னைக்கு கிளம்பியிருந்தார். நேற்று (2026 மே 30ம் தேதி) மாலையில் சென்னை வந்தடைந்த அஜித், ஈஞ்சரம்பாக்கத்தில் தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தாயாரை காண விரைந்து சென்றார். அஜித் குமார் தனது தாயை பார்த்து கண்கலங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அஜித்தின் தாய் மோகினியின் உடலுக்கு பல்வேறு பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

மேலும் அஜித்தின் நண்பரும், தமிழக முதல்வருமான தளபதி விஜய்யும் (CM Vijay) நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார். இன்று (2026 மே 31ம் தேதி) பெசன்ட் நகரில் அஜித்தின் தாயார் மோகினியின் உடல் தகனம் செய்யப்பட்டது. அந்த இறுதி ஊர்வலத்தில் பாதுகாப்பு கொடுத்த அனைத்து காவல்துறையினருக்கும் நடிகர் அஜித் குமார் கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜன நாயகன் பட ரிலீஸ் பிரச்சனை.. உண்மையை சொல்லுற அளவுக்கு தைரியம் இல்ல – இயக்குநர் எச்.வினோத்!

காவல்துறையினருக்கு அஜித் குமார் நன்றி தெரிவித்தது குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:

நடிகர் அஜித் குமார் பொதுவாகவே அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் நபராக இருந்துவருகிறார். மேலும் அவரின் ரசிகர்களுக்கும், அவர் மற்றவர்களை மதிக்கவேண்டும் என்ற ஒரு எடுத்துக்காட்டாகவே வாழ்த்துவருகிறார். தனது தாயின் இறுதி சடங்கில் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கொடுத்த காவல்துறை போலீசாருக்கு, கையெடுத்து கும்பிட்டு மென்மையான முகத்துடன் அஜித் குமார் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: நடிகர் அஜித்தின் தாயார் மறைவு – முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

அஜித்தின் தாயாருக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் :

நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மணி வயது மூப்பின் காரணமாக உறக்கத்தில் காலமானார். இந்நிலையில் இந்த தகவலறிந்து பல்வேறு பிரபலங்கள் எக்ஸ் பக்கத்தில் தங்களின் இரங்கலை தெரிவித்திருந்தனர். மேலும் நடிகர்கள் பார்த்திபன், கதிர், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சீமான், மாஸ்டர் மகேந்திரன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகை திரிஷா என பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us