AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உலகின் மிக நீண்ட ஹைட்ரஜன் ரயிலை அறிமுகம் செய்த இந்தியா.. உலக நாடுகளை பின்னுக்கு தள்ளியது!

India's Longest Hydrogen Train | பசுமை ரயில் திட்டத்தில் ஹைட்ரஜன் ரயில்களை உலக நாடுகள் இயக்கி வருகின்றன. இந்த நிலையில், உலக அளவில் முதல் முறையாக மிக நீளமான ஹைட்ரஜன் ரயிலை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலகின் மிக நீண்ட ஹைட்ரஜன் ரயிலை அறிமுகம் செய்த இந்தியா.. உலக நாடுகளை பின்னுக்கு தள்ளியது!
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹைட்ரஜன் ரயில்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Jul 2026 22:50 PM IST

உலகின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயிலை (Hydrogen Train) இயக்கி இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. உலக நாடுகளில் இரண்டு முதல் மூன்று பெட்டிகளை உடைய ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், உலக அளவில் முதல் முறையாக 10 பெட்டிகளை கொண்ட ஹைட்ரஜன் ரயிலை இயக்கி இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஹைட்ரஜன் ரயில் குறித்தும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

மிக நீளமான ஹைட்ரஜன் ரயிலை இயக்கி இந்தியா சாதனை

இந்தியா, ஹரியானா ஜிந்த் – சோனிபட் இடையே 10 பெட்டிகளை கொண்ட உலகின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலை இயக்கி பசுமை ரயில் துறையில் இந்தியா சாதனை படைத்துள்ளது. பசுமை ரயில் திட்டத்தின் முக்கிய அம்சமாக ஹைர்டஜன் ரயிலை ஊக்குவிக்கும் உலக நாடுகளான ஜெர்மனி, ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.

இதையும் படிங்க : இணைய வசதியின்றி ரூ.2,000 வரை யுபிஐ பணப்பரிவர்த்தனை? NPCI புதிய வசதி.. எப்படி செயல்படும்?

உலகில் உள்ள பல்வேறு வளர்ந்த நாடுகள் வெறும் இரண்டு அல்லது மூன்று பெட்டிகளை கொண்ட ஹைட்ரஜன் ரயில்களை மட்டுமே பயன்பாட்டில் வைத்துள்ள நிலையில், 10 பெட்டிகளை கொண்டு ஹைட்ரஜன் ரயிலை இயக்கி இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ரயிலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அளித்துள்ளார்.

ஹைட்ரஜன் ரயில் குறித்த முக்கிய அம்சங்கள்

ஹைட்ரஜன் ரயில்கள் மூலம் சுற்று சூழலுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது. ஹைட்ரஜன் ரயில்கள், டீசல் இன்ஜின்களை போல கருப்பு புகையை வெளியிடுவதில்லை. இந்த ரயில்களில் இருந்து ஹைட்ரஜன் வினையால் நீராவி மட்டுமே துணை பொருளாக வரும். இதன் காரணமாக தான் இந்த ரயில் பசுமை ரயில் திட்டத்தின் முக்கிய அம்சமாக உள்ளது.

இதையும் படிங்க : ஒருமுறை சார்ஜ் செய்தால் 142 கிலோ மீட்டர் பயணம்.. சந்தையில் அறிமுகமான அட்டகாசமான மின்சார இருசக்கர வாகனம்!

சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹைட்ரஜன் ரயில் இந்தியாவின் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us