AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 142 கிலோ மீட்டர் பயணம்.. சந்தையில் அறிமுகமான அட்டகாசமான மின்சார இருசக்கர வாகனம்!

Ampere Magnus G Max Electric Two Wheeler | பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தட்டுப்பாடு உள்ளிட்டவற்றின் காரணமாக ஏராளமான பொதுமக்கள் மின்சார வாகனங்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், அசத்தல் அம்சங்கள் உடன் கூடிய புதிய மின்சார இருசக்கர வாகனம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 142 கிலோ மீட்டர் பயணம்.. சந்தையில் அறிமுகமான அட்டகாசமான மின்சார இருசக்கர வாகனம்!
புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட மின்சார வாகனம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Jul 2026 23:02 PM IST

உலக நாடுகளில் வசிக்கும் பொதுமக்கள் மின்சார வாகனங்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் இந்த முடிவை எடுக்கின்றனர். அதற்கு ஏற்றவாறு நிறுவனங்களும் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், தற்போது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மின்சார வாகனம் குறித்தும், அதன் சிறப்பு அம்சம் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

Ampere Magnus G Max மின்சார இருசக்கர வாகனம் அறிமுகம்

மின்சார வாகனங்களை அறிமுகம் செய்து வரும் கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் தனது புதிய மின்சார இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த Ampere Magnus G Max வாகனம், தினசரி பயணங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த மின்சார இருசக்கர வாகனத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் குடும்ப வாடிக்கையாளர்களை கவரும் விதமாக உள்ளன.

இதையும் படிங்க : நியூ ஸ்மார்ட்போன்களில் ஏன் பேட்டரியைக் கழற்ற முடிவதில்லை? இதோ அதற்கான காரணங்கள்!

வாகனத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த வாகனத்தில் மிகவும் சக்தி வாய்ந்த 3  kWh லித்தியம் அயர்ன் பாஸ்பேட் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம், 142 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என கூறப்படுகிறது. இந்த இருசக்கர வாகனத்தில் மணிக்கு சுமார் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முடியும். இந்த வாகனம், நகர பயணங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க : இணைவ சேவையை மந்தமாக்கும் வீட்டு உபயோக பொருட்கள்.. என்ன என்ன தெரியுமா?

இந்த வாகனத்தில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 7.5 மணி நேரம் தேவைப்படும். இந்த வாகனத்தில் எகோ மற்றும் சிட்டி என இரண்டு விதமான அட்டகாசமான மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 116 கிலோ எடை கொண்ட இந்த இருசக்கர வாகனம், சுமார் 150 கிலோ வரை எடை தாங்கும் தன்மை கொண்டுள்ளது.

தற்போதுள்ள சூழலில் மின்சார வாகனங்களை வாங்குவது தான் சிறப்பானதாக இருக்கும். இந்த நிலையில், மின்சார இருசக்கர வாகனங்களை வாங்க நினைக்கும் நபர்கள் இந்த வாகனத்தை கருத்தில் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us