இணைய வசதியின்றி ரூ.2,000 வரை யுபிஐ பணப்பரிவர்த்தனை? NPCI புதிய வசதி.. எப்படி செயல்படும்?
இந்த PoS கருவிகள் மூலம் டெபிட், கிரெடிட், ப்ரீபெய்டு கார்டுகள் மற்றும் மொபைல் வாலெட் பணப்பரிவர்த்தனைகளையும் வணிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியும். இணைய இணைப்பு இல்லாத நேரத்தில் பரிவர்த்தனை அங்கீகாரத் தகவலை PoS கருவி சேமித்து வைத்துக்கொள்ளும். பின்னர் இணைய இணைப்பு மீண்டும் கிடைத்தவுடன் அந்தத் தகவல் தொடர்புடைய நெட்வொர்க்கிற்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படும்.
ஜூலை 21, 2026: இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பெரும்பாலானோர் யுபிஐ பணப்பரிவர்த்தனையைப் பயன்படுத்தி வருகின்றனர். சிறிய கடைகள் முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை பல்வேறு இடங்களில் யுபிஐ ஸ்கேனர்கள் காணப்படுகின்றன. இதன் மூலம் சில நொடிகளில் பணம் செலுத்த முடிவதால், யுபிஐ பரிவர்த்தனை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.
இந்த நிலையில், இணையதள இணைப்பு இல்லாமலேயே வணிகர்களின் பாயின்ட் ஆஃப் சேல் (PoS) கருவிகளில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் வகையில் யுபிஐ வசதியை விரிவுபடுத்த தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் படிக்க: அசைமென்ட் முதல் இமெயில் வரை… நம் வேலைகளை எளிதாக்கும் சிறந்த 5 ஏஐ சாட்பாட்கள்
ரூ. 2000 வரை பணம் செலுத்த முடியும்:
இதற்காக முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் PoS கருவிகளுக்கு 2026ஆம் ஆண்டில் அனுமதி வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய வசதி, நியர் ஃபீல்டு கம்யூனிகேஷன் (NFC) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். இதன் மூலம் NFC வசதி கொண்ட ஸ்மார்ட்போனை இணைய இணைப்பு இல்லாத PoS கருவியில் ‘டேப்’ செய்வதன் மூலம் ரூ.2,000 வரை பணம் செலுத்த முடியும்.
சிக்னல் இல்லாத பகுதிகளிலும் பணப்பரிவர்த்தனை:
விமான கேபின்கள், நிலத்தடி ரயில் நெட்வொர்க்குகள் உள்ளிட்ட இணைய இணைப்பு அல்லது மொபைல் சிக்னல் கிடைக்காத பகுதிகளில் பயன்படுத்தும் வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் இணையத்துடன் இணைந்திருக்கும் நேரத்தில், தங்களது சாதனத்தில் உள்ள யுபிஐ லைட் வாலெட்டில் பணத்தை முன்கூட்டியே ஏற்றிக்கொள்ள வேண்டும். பின்னர், இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் யுபிஐ பின் எண்ணை உள்ளிடாமல், அந்தத் தொகையைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.
மேலும் படிக்க: மொவைல் ஹாட்ஸ்பாட் போட்டால் 5ஜி சேவை கட்?.. பயனர்களுக்கு ஏர்டெல் வைத்த டிவிஸ்ட்?
ஆஃப்லைன் முறையில் யுபிஐ பணப்பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்ள PoS நிறுவனங்கள் NPCI-யிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும். சான்றிதழ் பெற்ற பின்னர், இந்த வசதிக்கான செயலியை உருவாக்கி PoS கருவிகளில் பயன்படுத்த முடியும்.
இது எப்படி செயல்படும்?
இந்த PoS கருவிகள் மூலம் டெபிட், கிரெடிட், ப்ரீபெய்டு கார்டுகள் மற்றும் மொபைல் வாலெட் பணப்பரிவர்த்தனைகளையும் வணிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியும். இணைய இணைப்பு இல்லாத நேரத்தில் பரிவர்த்தனை அங்கீகாரத் தகவலை PoS கருவி சேமித்து வைத்துக்கொள்ளும். பின்னர் இணைய இணைப்பு மீண்டும் கிடைத்தவுடன் அந்தத் தகவல் தொடர்புடைய நெட்வொர்க்கிற்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படும்.
இந்த NFC அடிப்படையிலான வசதி மூலம், யுபிஐ செயலியைப் பயன்படுத்தி PoS கருவியில் ‘டேப்’ செய்வதன் மூலம் இணைய இணைப்பு இல்லாமலேயே ரூ.2,000 வரை பணம் செலுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் மூன்றாம் தரப்பு யுபிஐ செயலி நிறுவனங்களும் இந்த வசதியை தங்களது செயலிகளில் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.