AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இலங்கையை உலுக்கும் எல் நினோ.. 1.15 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரம் காலி.. பதறவைக்கும் பின்னணி!

Sri Lanka El Niño Impact : எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 534 பேர் குடிநீர் பற்றாக்குறையை எதிர் கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி எருவேவா நீர்த் தேக்கம் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை உலுக்கும் எல் நினோ.. 1.15 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரம் காலி.. பதறவைக்கும் பின்னணி!
தண்ணீர் பற்றாக்குறை.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 10 Sep 2026 16:35 PM IST

இலங்கையில் எல் நினோ வானிலை மற்றும் அதிக வெப்பநிலை, குறைவான மழைப்பொழிவு ஆகியவற்றின் காரணமாக 1 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதி அடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல் நினோ நிலை உருவாகி வருவதாகவும் அது தற்போது நிலவும் வானிலை அமைப்புக்கு காரணமாக அமையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகன் அஜித் விஜே மன்னன் தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் கிழக்கு வெப்ப மண்டல பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் காலமுறை வெப்பமயமாதலான எல் நினோ அந்த பிராந்தியம் முழுவதும் வெப்பநிலை அமைப்புகளை மாற்றக்கூடும் என்றும் வறண்ட காலநிலை தொடர்வதால் இலங்கையின் மீது ஏற்படக்கூடிய தாக்கத்தை கருத்தில் கொண்டு அதன் வளர்ச்சி உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

இலங்கையில் 25 நிர்வாக மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு

இந்திய பெருங்கடலால் சூழப்பட்ட இந்த தீவு இதன் தாக்கத்தை மிகவும் தீவிரமாக உணரக்கூடும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். பேரிடர் மேலாண்மை மையத்தின் தகவல்களின்படி இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்களில் வானிலை அமைப்பால் 115.586 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் வெப்பம் மற்றும் மழையின்மையால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டு தண்ணீர் கிடைப்பதில் கடுமையான சவால்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குடிநீர் பற்றாக்குறையால் தற்போது ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டி.எம்.சி. அதிகாரி பிரகித் தனன் சூர்யா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: தெஹ்ரான் தாக்குதல்கள் போர்க்குற்றமாக இருக்கலாம்: அம்னஸ்டி இன்டர்நேஷனல் பரபரப்பு குற்றச்சாட்டு

எருவேவா நீர் தேக்க நீர் மட்டம் வெகுவாக குறைவு

வடமத்திய அனுராதபுரம் மாவட்டத்தில் சுமார் 3,500 ஏக்கர் அடி கொள்ளளவு கொண்ட எருவேவா நீர் தேக்கத்தின் நீர்மட்டம் ஏறத்தாழ சுமார் 1000 ஏக்கர் அடியாக குறைந்துள்ளதாக நீர் பாசன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய பகுதியின் வடகிழக்கின் நந்திக் கடல் உள்ளிட்ட பகுதிகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீடித்த வறண்ட நிலை, நீர்வாழ் உயிரினங்களையும், வனவிலங்குகளையும் பாதிக்கிறது. வடகிழக்கிலுள்ள முல்லைதீவு காயலில் ஆயிரக்கணக்கான சிறுமீன்கள் செத்து கிடப்பது தெரியவந்துள்ளது.

விவசாயம் கடுமையாக பாதிப்பு

அத்துடன் கடல் நீரும், நல்ல நீரும் கலந்ததன் காரணமாகவே மீன்கள் இறப்புக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இயற்கை நீர் ஆதாரங்கள் வற்றி வருவதனால் வனவிலங்குகள் மாற்று நீர் ஆதாரங்களை தேடி வேறு இடங்களுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளன. விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது தண்ணீர் பற்றாக்குறையால் நெல், தென்னை, வாழை மற்றும் கொய்யா உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

மேலும் படிக்க: உலக பணக்காரர் பட்டியல்.. தட்டித்தூக்கும் எலான் மஸ்க்.. பேஸ்புக் ஓனர் நிலை என்ன? லிஸ்ட் இதோ!

Follow Us