தெஹ்ரான் தாக்குதல்கள் போர்க்குற்றமாக இருக்கலாம்: அம்னஸ்டி இன்டர்நேஷனல் பரபரப்பு குற்றச்சாட்டு
US - Iran war: அம்னஸ்டி பொதுச் செயலாளர் ஆக்னஸ் காலமார்ட் கூறுகையில், மக்கள் அதிகம் வசிக்கும் நகர்ப்புற பகுதிகளில் பரந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் எதிர்பார்க்கக்கூடியவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
செப்டம்பர் 9, 2026: தெஹ்ரானில் மக்கள் நெருக்கம் மிகுந்த 3 பகுதிகளில் மார்ச் மாதம் நடத்தப்பட்ட இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் போர்க்குற்றமாக இருக்கலாம் என அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மார்ச் 1 முதல் 13ஆம் தேதி வரை நைலூஃபர், ரெசாலத் மற்றும் ஜாவாதியே பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 41 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அம்னஸ்டி தெரிவித்துள்ளது. மேலும், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் கூறியுள்ளது.
இஸ்ரேல் வான்வழித்ஃப் தாக்குதல் – போர்க்குற்றம்:
The U.S./Israeli strikes in Tehran may constitute indiscriminate attacks and amount to war crimes. They must be the object of independent, impartial, effective and transparent investigations.https://t.co/l8Ih8FVFrD
— Amnesty International USA (@amnestyusa) September 8, 2026
அம்னஸ்டி பொதுச் செயலாளர் ஆக்னஸ் காலமார்ட் கூறுகையில், மக்கள் அதிகம் வசிக்கும் நகர்ப்புற பகுதிகளில் பரந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் எதிர்பார்க்கக்கூடியவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரெசாலத் பகுதியில் உள்ள பாசிஜ் படைப் பிரிவின் கட்டிடம் தாக்கப்பட்டதுடன், அருகிலிருந்த 3 கட்டிடங்களும் சேதமடைந்ததாகவும், இதில் குறைந்தது 16 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் அம்னஸ்டி கூறியுள்ளது. நைலூஃபர் மற்றும் ஜாவாதியே பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் 25 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கிசுகிசு மூலம் பணம் சம்பாதிக்கும் பெண்.. வந்த காசில் இரண்டு வீடுகள்.. இணையத்தில் கவனம் ஈர்க்கும் சம்பவம்..
இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், தெஹ்ரானில் தாங்கள் நடத்திய தாக்குதல்கள் குறித்து இரு நாடுகளும் ஏற்கனவே அறிவித்திருந்ததாக அம்னஸ்டி தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோள் படங்கள், இணையத்தில் வெளியான 60 வீடியோக்கள் மற்றும் ஈரான், இஸ்ரேல், அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகளை ஆய்வு செய்ததுடன், ஈரானில் இருந்த 2 பேரிடமும் தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக அம்னஸ்டி தெரிவித்துள்ளது.
ஈரான் அமெரிக்கா இடையே அதிகரிக்கும் போர் பதற்றம்:
இதனிடையே, அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் ஒன்றை ஹோர்முஸ் நீரிணை பகுதியில் கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலளித்த அமெரிக்க ராணுவம், பழைய மாடல் ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் ஒன்று செயலிழந்ததாக கூறியுள்ளது.
மேலும், ஈரானின் 27 விமான நிறுவனங்களை அமெரிக்க கருவூலத் துறை தடைகள் பட்டியலில் சேர்த்துள்ளது. ஈரானின் வணிக விமான நிறுவனங்கள் ஆயுதங்கள் மற்றும் ஆட்களை கொண்டு செல்ல உதவுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் படிக்க: காங்கோ திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 22 பேர் பரிதாப பலி
இதற்கிடையே, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், ஆக்கிரமிப்பாளர்கள் முழுமையாக பின்வாங்கும் வரை ஈரான் தனது எதிர்ப்பைத் தொடரும் என தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது.