மொவைல் ஹாட்ஸ்பாட் போட்டால் 5ஜி சேவை கட்?.. பயனர்களுக்கு ஏர்டெல் வைத்த டிவிஸ்ட்?
Airtel Limiting 5G Service For Hotspot | ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி அன்லிமிடேட் சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஹாட்ஸ்பாட் போடும்போது தங்களால் 5ஜி சேவையை பெற முடியவில்லை என பயனர்கள் கூறி வருகின்றனர்.
பயனர்கள் தடையற்ற இணைய வசதியை பெறுவதற்காக தான் இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ் (Reliance), ஏர்டெல் (Airtel) உள்ளிட்ட முக்கிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் தான், ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவையில் பயனர்கள் சில சிக்கல்களை எதிர்க்கொண்டுள்ளனர். அதாவது, கடந்த சில நாட்களாக பயனர்கள் தங்களது 5ஜி இணைய சேவையை மொபைல் ஹாட்ஸ்பாட் (Mobile Hotspot) மூலம் வேறு ஒருவருக்கு வழங்குவதை ஏர்டெல் தடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏர்டெலின் 5ஜி இணைய சேவையில் ஹாட்ஸ்பாட் வசதி இல்லை?
ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் தங்களது பயனர்கள் சீரான மற்றும் தடையற்ற இணைய சேவையை பெறும் வகையில் தனது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு திட்டங்களுக்கு அன்லிமிடெட் 5ஜி இணைய சேவையை வழங்கி வருகிறது. ஒருமுறை திட்டத்தை தேர்வு செய்து ரீச்சார்ஜ் செய்யும் பட்சத்தில் அந்த திட்டம் முடிவு பெறும் வரை தடையில்லாமல் இணைய சேவையை பெற முடியும்.
இதையும் படிங்க : அசைமென்ட் முதல் இமெயில் வரை… நம் வேலைகளை எளிதாக்கும் சிறந்த 5 ஏஐ சாட்பாட்கள்
ஏர்டெல் தனது பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி சேவையை வழங்கி வந்த நிலையில், அது தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது எக்ஸ் தளத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் Terms and Conditions குறித்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், அந்த நிறுவனம் பயனர்கள் தாங்கள் மட்டும் இணைய சேவையை பயன்படுத்தும்போது 5ஜி சேவையை பயன்படுத்தலாம் என்றும், ஹாட்ஸ்பாட் பகிரும்போது 4ஜி சேவையை மட்டுமே பயன்படுத்த முடியும் என கூறியுள்ளது.
பயனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய ஏர்டெலின் செயல்
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை குறித்து பயனர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சிலர் தாங்கள் லேப்டாப்பில் மொபைல் ஹாட்ஸ்பாட் இணைத்து பயன்படுத்துவதாகவும், இந்த நடவடிக்கை தங்களை கடுமையாக பாதிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.