திருப்பி போற ஐடியாவே இல்லை.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா!
Kaavya Arivumani Viral Instagram Post : விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை காவ்யா. சமீபத்தில் இவர் வெளியிட்ட பதிவில், நிராகரிப்பு குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சின்னத்திரை தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சி சீரியலாக இருந்துவருபவது பாண்டியன் ஸ்டோர்ஸ் (Pandian Stores). இந்த சீரியலானது விஜய் தொலைக்காட்சியில் தின்தோறும் ஒளிபரப்பாகிவருகிறது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலானது ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த சீரியலின் சீசன் 1ல் பிரபலமான கதாபாத்திரத்தில் ஒன்றுதான் முல்லை. இந்த வேடத்தில் நடிகை காவ்யா நடித்திருந்தார். ஆரம்பத்தில் இவ்வேடத்தில் மறைந்த நடிகை வி.ஜே.சித்ரா (VJ Chithra) நடித்திருந்தார். அவரின் மறைவிற்கு பிறகு நடிகை காவ்யா இந்த வேடத்தில் நடித்திருந்தார். இதன் மூலமாக இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு கிடைத்தது. சீரியல்களில் நாயகியாக நடித்துவந்த இவர், தற்போது சினிமாவின் பக்கம் தனது கவனத்தை செலுத்திவருகிறார்.
இவர் சினிமாவில் சிறு படங்களில், சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகை காவ்யா சமீபத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த பதிவில் அவர், நிராகரிப்பு குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: கணவன் மனைவி ஃபைட்.. மேக்கிங் வீடியோவை பகிர்ந்த கட்டா குஸ்தி 2 படக்குழு!
நிராகரிப்பு குறித்து நடிகை காவ்யா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
அந்த பதிவில் நடிகை காவ்யா அதில், “ரிஜெக்ஷன் ரிஜெக்ஷன் ரிஜெக்ஷன்.. எனக்கு இது ஒன்னும் புதுசு இல்ல. கொழுந்து விட்டு எரியுற தீய அணைக்க முடியாது. ஒருநாள் வெடிக்கும். என் ட்ரெயின் ல நா ஏறாம விடமாட்டேன்” என அதில் எழுதியுள்ளார். மேலும் அந்த பதிவின் கீழ், “திரும்பி போற ஐடியாவே இல்லை” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த பதிவின் கீழ் பல்வேறு ரசிகர்கள் மற்றும் நடிகைகளும் ஆதரவு தெரிவிக்கின்றனர். மேலும் பிக் பாஸ் சீசன் 9 வெற்றியாளர் திவ்யா கணேசன்தனது கருத்தை கூறியுள்ளார். அதில் அவர், “நிச்சயமாக நீ உயரமாகப் பறப்பாய் பேபி” என அதில் அவர் கூறியுள்ளார். அந்த வகையில் இப்பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: என்னுடைய நடிப்பில் சிறந்த படைப்பாக வேட்டுவம் படத்தை பார்க்கிறேன் – நடிகை ஷோபிதா துலிபாலா
நடிகை காவ்யா அறிவுமணி நடிக்கும் படம்:
நடிகை காவ்யா ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ளார். மிரல், ரிப்பரி மற்றும் நிறம் மாறும் உலகில் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்த வரிசையில் இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், கவின் மற்றும் நயன்தாரா நடித்துள்ளார் ஹாய் படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாராவின் நெருங்கிய தோழியாக காவ்யா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பாடல் வெளியாகியிருந்த நிலையில் அதில் காவ்யா இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சீரியலை தொடர்ந்து சினிமாவில் முழுமையான ஈடுபாட்டை காட்டிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.