Bigg Boss Julie: கிட்னி தருவதாக கூறி ரூ 15 லட்சம் மோசடி..? கண்ணீருடன் பிக்பாஸ் ஜூலி!
Bigg Boss Julie Files Police Complaint: தமிழில் பிக் பாஸ் சீசன் 1ன் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜூலி. இவரின் உண்மையான பெயர் மரிய ஜூலியானா. இவர் சமீபத்தில் கிட்னி திருடியதாக புகார்கள் இணையத்தில் வைரலாகிவந்த நிலையில், தன்மீது அவதூறான கருத்துக்களை பரப்புவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜூலி கண்ணீருடன் புகாரளித்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டில் சின்னத்திரையில் வெளியான பிக் பாஸ் சீசன் 1 (Bigg Boss 1) நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மரிய ஜூலியானா (Maria Juliyana). இவர் இதற்கு முன் சென்னை மெரினாவில் நடைபெற்றிருந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்தார். இதற்கு பிறகே, பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானார். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக பல விமர்சனங்களுக்கும் ஆளானார். இதை தொடர்ந்து சின்னத்திரை சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார். மேலும் எப்போதுஹ் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்துவருகிறார். மேலும் இவர் சமீபத்தில் கிட்னி திருட்டில் (kidney theft) ஈடுபட்டதாக இணையத்தில் பல தகவல்கள் வெளியாகிவந்தது.
இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அந்த வகையில் தொடர்ந்து பல விமர்சனங்களுக்கும் ஜூலி சிக்கிவந்தார். இந்நிலையில் இன்று 2026 மே 29ம் தேதியில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் (Chennai Police Commissioners Office) பகிரங்க புகாரை ஜூலி கொடுத்துள்ளார். தன்னை அவதூறாக பல போலியான தகவல்களை பரப்புவதாக புகார் கொடுத்துள்ளார்.




இதையும் படிங்க: ஜன நாயகன் எப்போ சார் வரும்? – இயக்குநர் எச்.வினோத் கொடுத்த பதில்!
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிக் பாஸ் ஜூலி கொடுத்த புகார்:
அந்த புகாரில் பிக் பாஸ் ஜூலி, கிட்னி தருவதாக கூறி ரூ 15 லட்சம் ஏமாற்றியதாக எனது மீது அவதூறு. தவெக கட்சிக்கு எதிராக நான் பேசுவதால் அவதூறு பரப்புகிறார்கள் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிக் பாஸ் ஜூலி புகார் அளித்துள்ளார். காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தபிறகு செய்தியாளர்களை சந்தித்த பிக் பாஸ் ஜூலி கண்ணீருடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: எனது ரகசிய பெயர்.. எனது கணவரும் அப்டித்தான் கூப்பிடுவாரு – சமந்தா சொன்ன ரகசியம்!
பிக் பாஸ் ஜூலியின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
பிக் பாஸ் ஜூலி மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருக்கிறார். இவர் சினிமாவில், சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நிலையில், இதை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பிரபலமாகவும், அரசியல் விமர்சராகவும் இருந்துவருகிறார். மேலும் இவர் தொடர்ந்து தவெக கட்சிக்கு எதிராக பேசிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.