கருப்பு படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் சொன்ன கமெண்ட்… ஆர்.ஜே.பாலாஜி ஹேப்பி அண்ணாச்சி
Rajinikanth gave positive comments after watching Karuppu movie | நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள கருப்பு படத்தை பார்த்துவிட்டு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தது குறித்து ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படையாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் தற்போது புதிதாக வெளியாகும் மற்ற நடிகர்களின் படங்கள் நன்றாக உள்ளது என்றாலும் புதிதாக படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்றாலும் அதற்கு மற்ற பிரலங்கள் மற்றும் நடிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவிக்க தவறியதில்லை. இந்த நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் கருப்பு. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாக பல சிக்கல்களை சந்தித்தது. படம் 14-ம் தேதி மே மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு சில நிதி நெருக்கடி காரணமாக 15-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டுதான் வெளியானது. இப்படி பல சிக்கல்களை தாண்டி படம் வெளியான போது அந்தப் படம் வெற்றிப் பெற வேண்டும் என்று பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான பிறகு தமிழ் பிரபலங்கள் மட்டும் இன்றி பாலிவுட் வரை பலரும் இந்தப் படத்தை வெகுவாகப் பாராட்டி வந்தனர். தொடர்ந்து இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. உலக அளவில் இந்தப் படம் ரூபாய் 300 கோடிகள் வசூலை எட்டியதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
கருப்பு படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் சொன்ன கமெண்ட்:
இந்த நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு கால் செய்து வாழ்த்தியதாக ஆர்.ஜே.பாலாஜி பேட்டி ஒன்றில் கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி ஆர்.ஜே.பாலாஜி அந்தப் பேட்டியில் பேசியபோது ரஜினிகாந்த் தனக்கு கால் செய்து ”பாலாஜி சூப்பர் சூப்பர் சூப்பர், சாதிச்சிட்டீங்க சாதிச்சிட்டீங்க சாதிச்சிட்டீங்க, எவ்ளோ பெரிய ஹிட்டு சீக்கிரம் சந்திப்போம்” என்று கூறியதாக தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:
Superstar #Rajinikanth to RJBalaji after watching #Karuppu:
“Balaji Super Super Super, Sathichtinga Sathichthinga Sathichtinga, Yevlo periya Hittu Seeikram Santhipom♥️🔥” pic.twitter.com/gNKxFPR7wi
— AmuthaBharathi (@CinemaWithAB) May 27, 2026
Also Read… விஜய் சேதுபதி உடன் கூட்டணி வைக்கும் இயக்குநர் பாலா? வைரலாகும் தகவல்



